கவிஞர்களுடைய கற்பனை வளத்திற்கு ஏற்ப அணிவகைகளும் விரிந்துகொண்டே
செல்லும்நிலைய. சொல்லணிகளைவிடப் பொருளணிகளே பெருங்கவிஞர்களால்
போற்றப்படுவன. ஆனால் தொல்காப்பியத்துக்கு உரை வரைந்த பேராசிரியருக்கு
உவமம் முதலியவற்றை அணி என்று குறிப்பிடுவதும், அணிவகைகள் பல அமைத்துப்
பெயரிடுவதும் உடன்பாடல்ல; உவமம் முதலியவை பொருட்கூறுகள் என்பதே அவர்
கருத்து. அவர் குறிப்பிடுவன பின் வருமாறு:
உவமவியலுள் கூறுகின்ற உவமங்களுள் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளும்
செய்யுளியலுள்ளும் சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்று
அவை செய்யுட் கண்ணே அணியாம் என இக்காலத்து ஆசிரியர் நூல் செய்தாரும்
உளர். அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணி என்று இலக்கணம் கூறப்படா;
என்னை? வல்லார் செய்யின் அணி யாகியும் அல்லார் செய்யின் அணி அன்று
ஆகியும் வரும், தாம் காட்டிய இலக்கணத்தில் சிதையாத வழியும் என்பது......
அல்லதூஉம் பொருளதிகாரத்துப் பொருட் பகுதிகள் எல்லாம் செய்யுட்கு
அணியாம்; அவை "பாடலுள் பயின்றவை" எனப்பட்டன என்பதனான். அவை
யெல்லாம் தொகுத்து அணியெனக் கூறாது, வேறு சிலவற்றை வரைந்து, அணியெனக்
கூறுதல் பயமில் கூற்றாம் என்பது.
இனி இரண்டு பொருள் எண்ணி அவற்றை வினைப் படுக்குங்கால் ஒருங்கு
என்பதொரு சொற்பெய்தல் செய்யுட்கு அணி என்ப. (வீரசோழியம்) இன்னோரன்ன
பலவும் செய்யுட்கு