| |
| ஓர் அசையான் ஆசுஇட்டு ஒரு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பாவிற்குச் செய்யுள் : |
| | `ஆத்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும் காத்தோம்பித் தம்மை அடக்குப; - மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந்து, எருவைபோல், போத்தறார் புல்லறிவி னார்' | | | | - யா. கா. 24 மே. நாலடி. 351 | | |
| [அடக்குப என்பதில் பகரம் ஆசு] |
| எனவும், |
| ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் : |
| | `வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார், வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்; வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல், வைகலை வைத்துணரா தார்.' | | | | - யா. கா. 25 மே; நாலடி. 39 | | |
| [வைகுமென் என்பதிலுள்ள என் என்பது ஆசு] |
| எனவும், |
| இரு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் : |
| | `இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்றாது, `பின்றையே நின்றது கூற்றம் என்றெண்ணி, ஒருவுமின் தீயவை ; ஒல்லும் வகையான் மருவுமின்; மாண்டார் அறம்.' | | | | - யா. கா. 25 மே; நாலடி. 36 | | |
| எனவும், |
| பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் : |
| | `கடற்குட்டம் போழ்வர் கலவர்; படைக்குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோமில் தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் ; அவைக்குட்டம் கற்றான் கடந்து விடும்.' | | | | - யா. கா. 25 மே; நான்மணி 18 | | |
| எனவும், |