‘மேல் வேற்றுமைக்கு இடனாய்’ என்றது 176-ஆம் நூற்பாவில் கூறியது. நிற்கும்இடம்- ஏற்கும் பெயர்க்கு ஈறு. பொது இலக்கணம்- பெயர்ப் பொருளை வேற்றுமை செய்தல். இத்துணைய என்பது- விளியை நீக்க ஏழு. மேலை கூறுதல்-196 ஆம் நூற்பா. யானைக்கோடு முதல் பொற்றொடி ஈறாகியன அறுவகைத் தொகைக்கும் முறையே எடுத்துக்காட்டு. கொல்யானை என்புழி, கொல் என்னும் வினைப்பகுதியைத் தொல்காப்பியனார் தொழிற்பெயர் என்றே ஆளுதலின் அதுவும் பெயரொடு பெயர் தொக்க தொகையேயாம். பெயரொடு பெயர் தொக்கனவும் ஒருசொல் நீர்மையவாய் எழுவாய் வேற்றுமை முதலிய நிலையை எய்துதல், |