சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-44177

விளக்கம்
 

ஐந்தாம் எண்ணும் முறைமை- 194 ஆம் நூற்பாவில் கண்டது.

காக்கையின் கரிது களம்பழம் என்ற தொடர் காக்கையை விடக் களம்பழம் கரிது
என்று பொருள்படுமிடத்து இன் உருபு உறழ் பொருவின்கண் வந்தது எனவும்,
காக்கையைப்போலக் கரிது களம்பழம் என்று பொருள்படுமிடத்து இன் உருபு
உவமப்பொருவாய் வந்தது எனவும் கொள்க.

உறழ்தல்- மாறுபடுதல், உவமம்- ஒத்தல்.

இனி, தொல்காப்பியனார் ஐந்தாம் வேற்றுமைக்குக் கொண்டு முடியும் சொற்களாக,
 

  ‘வண்ணம் வடிவே அளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை என்றா
முதுமை இளமை சிறத்தல் இழித்தல்
புதுமை பழைமை ஆக்கம் என்றா
இன்மை உடைமை நாற்றம் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதல்என்று
அன்ன பிறவும் அதன்பால என்மனார்’
சொல். 78
   
                    என்ற நூற்பாவில் கொண்டன எல்லாவற்றையும் இவ்வாசிரியரும் கொண்டு
கூறுகிறார்.
 
  நீங்கல்-தீர்தல், பற்றுவிடுதல் என்பன.
ஏது- அச்சம், ஆக்கம் என்பன.