சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

212 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  பொதுப்பெயர்- அன்னை, அத்தை என்பன.
உயர்திணைப் பெயர்- நங்கை, மடந்தை என்பன.
அஃறிணைப் பெயர்- நாரை, முல்லை, என்பன.
 
தொல்.சொல். 151 இல் ‘தெளிநிலை உடைய’ என்ற மிகையால் கொள்ளப்பட்டன.


ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘ஐ ஆய் ஆகும்.

தொல்.சொல்.121

 
  ‘முறைப்பெயர் மருங்கின் ஐஎன் இறுதி
ஆவொடு வருதற் குரியவும் உளவே.’

நே. சொல். 25

 
  முழுதும்

நன். 306, தொ.வி.70

 
  ‘ஐ ஆய் ஆகும்.’

மு.வீ.பெ. 101

 
  ‘ஐகான் இறுதி முறைப்பெயர் மருங்கின்
ஆவொடு வருதற் குரிய வாகும்.’

மு.வீ.பெ. 106


னகர ஈற்றுச் சிறப்பு விதி
 

209. ஒருசார் ன- ஈற்று உயர்திணைப் பெயர்க்கண்
அளபுஈறு அழிவுஅயல் நீட்சி அதனொடு
ஈறுபோதல் அவற்றோடு ஓஉறல்
ஈறு அழிந்து ஓஉறல் இறுதி ய- ஆதல்
அதனோடு அயல்திரிந்து ஏஉறல் ஈறுஅழிந்து
அயல்ஏ ஆதலும் விளிஉருபு ஆகும்.

29

   
                    இது னகர ஈற்று உயர்திணைப் பெயர்கட்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி
கூறுகின்றது.

இ-ள்; னகர ஈற்று உயர்திணைப் பெயருள் சில சேரமான் சேரமாஅன்-
மலையமான் மலையமாஅன்- அம்பர் கிழான் அம்பர்கிழாஅன்- வல்லங்கிழான்
வல்லங்கிழாஅன்- எனச் சேய்மைக்கண் அளபு எடுத்தலும்,