சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

298 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

முன்னையன அன் சாரியை பெற்றன; பின்னையன அச் சாரியை பெறாதன.
 

  ‘பண்பி னாகிய சினை முதற் கிளவி’

 தொல்.சொல்.220


என்பதனை ஒட்டிச் சினை பற்றிய வினைக்குறிப்புக்களுக்கு அடைகள்
கொடுக்கப்பட்டன; என்னை? பண்பு அடுத்த சினை பற்றி அல்லது அவ்வினைக்குறிப்பு
நில்லாமையின்.(தொல்.சொல். 220 சே.)

வகர ஈறும் ஓதுபவர் தொல்காப்பியனாரும் நேமிநாத நூலாரும் முத்துவீரிய நூலாரும் ஆவர்.
 

  ‘அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை’

தொல்.சொல். 216

முதலியன நோக்குக.

இன்மை உண்மைக்கும் மறுதலைச்சொல்; உடைமைக்கும் மறுதலைச்சொல்; ஆதலின் இன்மை பற்றிய எடுத்துக்காட்டுக்கள் உண்மைக்கு மறுதலையாகிய இன்மை, உடைமைக்கு மறுதலையாகிய இன்மை என்ற இரண்டு பற்றியும் வரும்.
 

  இன்று, இல- உண்மைக்கு மறுதலை.
கோடின்று, கோடில- உடைமைக்கு மறுதலை.
இன்று, இல முதலிய எடுத்துக்காட்டுக்கள்,
‘இன்றுஇல உடைய என்னும் கிளவியும்
அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும்
பண்புகொள் கிளவியும் உளஎன் கிளவியும்
பண்பி னாகிய சினைமுதற் கிளவியும்
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ
அப்பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும்’

தொல்.சொல். 220