சான்றோர் எல்லாம் பெண்அவாய் ஆண் இழந்தனையே பேடு எனக் கூறுதலானும் அறிக. அற்றேல், ஏனை ஆண்பால் பெண்பால் போலப் புணர்ச்சி முதலாயவற்றிற்கு உரியவாய் முகவுரோமம் முலை முதலிய உறுப்புக்களை உடையவாய்த் தன்மை திரிந்தன ஆண்பேடு பெண்பேடு எனவும் இத்தன்மை இல்லது அலிஎனவும் கூறின் ஆகாதோ எனின் ஆகாது; |
| | ‘வேயே திரள்மென்தோள் வில்லே கொடும்புருவம் வாயே வளர்பவளம் மாந்தளிரே மேனி நோயே முலை சுமப்பது என்றார்க்கு அருகு இருந்தார் ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார், எறிமணிப்பூண் மேகலையாள் பேடியோ என்றார்.’ (சீவக.652)
‘பலிகொண்டு பேராத பாசம் இவன்கண் ஒலிகொண்டு உயிர்உண்ணும் கூற்றம் என்று எல்லோர்
கலிகொண்டு தேவர் முலைகரந்து வைத்தார் இலைகொண்ட பூணினீர் என்று எழினி சேர்ந்தாள் இலங்குபொற் கிண்கிணியாள் நக்குஎழினி சேர்ந்தாள் (சீவக.653) | |
என்பவற்றால் பேடியை முலை உறுப்பு இல்லாதவள் எனவும், அதனால் ஒலிகொண்டு உயிர் உண்ணும் தன்மையில்லாள் எனவும் விளங்கக் கூறுதலின். அன்றியும், தன்மை திரி பெயர்க்கு அலி வந்தது எனவே தாமும் உதாரணம் காட்டினார் ஆகலின், தமக்கும் இதுவே கருத்துப்போலும் என்க. |
அமைதி |
‘பெண்மை சுட்டாப்பேடு என்பது விலக்கப்பட்டதாம் என்று கூறிய சேனாவரையருக்குப் பேடு என்பதும் ஒரு சொல்லாதலும், அலி என்பது போலப் பெண் இழந்து ஆண் |