| என்ற நூற்பாவானும் அதற்குச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் உரைத்த உரைகளானும் உணரப்படும். நீர் பரந்தன- பால் சுரந்தன- என்பன அஃறிணை ஒருமையொடு பன்மை மயங்கியமைக்கு எடுத்துக்காட்டு. உண்பன தின்பன பருகுவன நக்குவன என்ற நான்கனையும் சோறு பொதுவாக உணர்த்தும் பன்மைச் சொல்லாகவும், எய்வன எறிவன வெட்டுவன குத்துவன என்ற நான்கனையும் படை பொதுவாக உணர்த்தும் பன்மைச் சொல்லாகவும், கண் முலை என்பன இயற்கைப் பன்மைச் சொற்களாகவும், எல்லாம் என்பது பன்மைச் சொல்லாகவும், கொள்ளப்பட்டு ஒருமைவினையோடு முடியுமிடத்து வழு அமைக்கப்பட்டன. |