| | ‘அஆ இறுதிமுன் ஓஒள வரினே இருமையும் கெடஒள எய்தும் என்ப.’ ‘இஏ முதற்கு ஐ ஆம் என மொழிப.’ ‘முதலில் உஊஓ ஒளவா கும்மே.’ ‘அகர முதல்மொழி ஆகாரம் ஆகும்.’ இந் நூற்பாக்களின் கருத்தை உணர்க. இனி, இலக்கணக்கொத்துடையார் தமிழில் வடமொழி, ‘பொதுஎழுத் தானும் சிறப்புஎழுத் தானும் ஈரெழுத் தானும் இயைந்தும்மொழி பெயர்த்தும் பொதுஎழுத் துள்ளும் பொதுவாய்த் திரிந்தும் தமிழ்ச்சிறப் பெழுத்துஐந் தானும் திரிந்தும் மொழிமுதல் இடைகடை எனும்மூன்று இடத்தும் தோன்றல் முதலா விகாரம் தோன்றியும் வருமே தமிழில் வடமொழி என்க.’ ‘பொதுஎழுத் தானும் சிறப்பொழுத்தானும் ஈரெழுத்தானும் இலங்கும் தமிழ்மொழி’. | 41 42 43 44
இ.கொ. 87
88 |
என்று கூறித் தமிழச்சிறப்பெழுத்து ஐந்தானும் திரிதற்கு, |
| | ஆரியச்சொல்
அத்புதம்
விகல்பம் சிவ:
நாராயண: அமிர்தம்
தைவம் யந்திரஊர்தி
கோங்கணம் | வடசொல்
அற்புதம் ற் விகற்பம் சிவன் ன் நாராயணன் அமிழ்தம் ழ் தெய்வம் எந்திர ஊர்தி எ கொங்கணம்- ஒ | |
| என்ற எடுத்துக்காட்டுக்கள் தருவர். தமிழ்ச்சிறப்பெழுத்து ஐந்தானும் திரியாமை தொல்காப்பியனாருக்கும் நன்னூலாருக்கும் ஒக்குமேனும், இலக்கியத்துள் அத்திரிபு காணப்படுதலின் தமிழ்ச்சிறப்பெழுத்துக் |