சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

712 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இ-ள்: முன்னிலை ஏவல் வினைச்சொல்முன் வரும் ஈகாரமும் ஏகாரமும்
முன்னிலைச் சொற்கு ஏற்றமெய் ஊர்ந்து வரும் என்றவாறு.

வரலாறு:

 

‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’
‘அட்டில் ஓலை தொட்டனை நின்மே’
 
அகம்.46
நற்.300
என இவை முன்னிலைக்கு ஏற்ற மெய் ஊர்ந்து வந்தவாறு கண்டுகொள்க.

ஈகாரம் ஒன்றேயாகப் புக்கீ- உண்டீ- உரைத்தீ- சென்றீ- என முன்னிலைவினை
ஈற்று வேறுபாட்டிற்கு ஏற்ப மெய் வேறுபட்டு வருதலான் ‘அந்நிலை மரபின் மெய்’
என்றார். ஏகாரம் மகரம் ஊர்ந்து அல்லது வாராது.

இவ் வெழுத்துப்பேறு புணர்ச்சி விகாரம் ஆகலின் ஈண்டுக் கூறற்பாற்று அன்று
எனின், அற்றன்று; முன்னிலை ஏவல் முன் ஈயும் ஏயம் அச்சொல்லொடு ஒற்றுமைப்பட்டு
நிற்றலான், நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாமையான், மெய்ப்புணர்ச்சி
விகாரம் எனப்படா என்க. ஈ என்பது ஓர் இடைச்சொல் என்பது அறிவித்தற்கு
‘இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே’ (359) என்பதனைச் சார ஈண்டுப்
போதந்து கூறினார்.

64

விளக்கம்
 

உரை சேனாவரையர் உரையை ஒட்டியது, ஈயும் ஏயும் புறத்து உறவுப் பொருள்பட
நின்றன.
 

ஒத்த நூற்பாக்கள்
 

ழுதும்- தொல்.சொல்.451, நன். 336, மு.வீ.ஒ.117
 

    [‘முன்னிலை முன்னர்’ என்பது பாடம்]