தின், உழையும் பிரிய லுறானறி யேனிவ
னுள்ளியதே”, “திண்பூ முகநெடு வேன்மன்னர்
சேவூர்ப் படமுடிமேற், றண்பூ மலர்த்தும்மபை
சூடிய தார்மன்ன னேரியென்னும், வண்பூஞ்
சிலம்பின் வரைப்பன நீங்கான் வருஞ் சுரும்பார்,
ஒண்பூந் தழையுந் தருமறி யேனிவ னுள்ளியதே”
(பாண்டிக்கோவை.)
8. |
“பூத்த வேங்கைவியன்சினை யேறி மயிலின
மகவு நாடன் நன்னுதற் கொடிச்சி
மனத்தகத் தோனே”(27)
(யா.வி.
மேற்;களவியற்
31மேற்.) |
என்பது தோழி தலைமகனைத் துணிந்தது. |
9. |
“1நண்ணுத
லரிதே தண்ணென் சாரல் எண்ணிய
குறையொன் றுளதெனின் நண்ணாது
முடித்தி யண்ண னீயே” (2)
(களவியற்.33,மேற்.) |
என்பது தலைமகனைச் சேட்பட நிறுத்தது. |
10. |
“2வாங்கிருஞ் சிலம்பின் வண்ட லயரும் தேங்கமழ்
கூந்தன் மகளிருள் யாங்கா கியதோ வேந்தனின் னருளே”
(நம்பி.
144, மேற்.) |
என்பது அறியாள் போன்றது. |
1. “புல்லா வயவர் நறையாற்றழியப் பொருதழித்த, வில்லான் விளங்குமுத்
தக்குடை மன்னன் வியனிலத்தோர், எல்லா மிறைஞ்சநின்றோன் கொல்லி மல்லலஞ்
சாரலிங்கு, நில்லா தியங்குமின் காப்புடைத் தையவிந் நீள்புனமே”,
“மண்ணிவர் செங்கோல் வரோதனை வல்லத்து மாற்றலர்க்கு, விண்ணிவர் செல்வம்
விளைவித்த வேந்தன் விண் டோய பொதியிற் கண்ணிவர் பூந்தண் சிலம்பிடை
வாரன்மின் காப்புடைத்தாற், பண்ணிவர் வண்டறை சோலை வளாயவெம் பைம்புனமே”
(பாண்டிக்கோவை)
2. ‘மன்னேர்மன் சாய லவருண் மருடீர, இன்னார்க ணென்பதறியேனால் மின்னூரும்,
கார்கெழு தோன்றற் கணமலை நன்னாட, யார் கண்ண தாகுங்குறை’ (தொல். களவு 23.
ந. மேற்.); “பொறிகெழுகெண்டை வடவரை மேல் வைத்திப் பூமியெல்லாம், நெறிகெழு
செங்கோனடாநெடு மாறனெல் வேலி வென்றான், வெறிகமழ் பூங்கன்னிக் கானல்
விளையாட் டயரநின்ற. செறி குழ லார்பலர் யார்கண்ண தோவண்ணல் சிந்தனையே”,
“திளையா வெதிர் நின்ற தெம்மன்னர் சேவூர் படச்சிறுகட், டுளையார் கருங்கைக்
களிறுந்தினான்றொண்டிச் சூழ்துறைவாய், வளையார் வனமுலை யார்வண்ட லாடும்
வரிநெடுங்கண், இளையார் பலருளர் யார்கண்ண தோவண்ண லின்னருளே’, (பாண்டிக்கோவை) |