தமிழ்நெறி விளக்கம் 11

11.1பயில்பூஞ் சாரனின் பண்புளங் கவர்ந்த
மயிலேர் சாயல் வாணுதல்
உயிரோ ரன்ன வன்பின ளெமக்கே”

(30)

என்பது அறியக் கூடியது.
12.2கடிகமழ் கண்ணி நெடுவரை யாயத்து
வடிவே லண்ணனீ மறைப்பின்
முடியா தாகு முன்னி வினையே” (31)

(களவியற். 32, மேற்.)

என்பது மறையேலென்றது.
13.“தூய்மை சான்ற தொல்குடித் தோன்றிய
வாய்மை நாவின் மதிதரன் போல
உயர்தவ முனிவர் சாரப்
பெயரா நிலையதிப் பிறங்குபெரு மலையே” (32)

(நம்பி. 147, மேற்.)
 

என்பது தோழி தலைமகன் குறியாதது கூறியது.
14.3கொடுஞ்சிலை வலத்த ரடுந்தொழிற் சீற்றத்
தென்னைய ரிவ்வழி வருகுவர்
சென்மதி சிலம்ப தீங்குதர லுடைத்தே”(33)
என்பது தோழி படைத்து மொழிந்தது.
15.4அலவ னாட்டலு மாட்டா ளாயமொடு
மலர்பூங் கானல் வண்டலு மயராள்

 


1. எனக்காவி நின்னை  வருத்திய  மானவ் விலங்கிழையாள், தனக்காவி நானுந்
தடமலை நாட தளையவிழ்பூஞ்,   சினைக்காவி னீகொய்த   தேமென்றழையுஞ்
சிலம்பிலந்தண்,   சுனைக்கா  வியுமங்  கருத்துவ  ளேவிறை   சோர நின்றே”
(அம்பிகாபதி கோவை, 132.)

2. “மின்னை           மறைத்தசெவ்       வேல்வலத்          தால்விழி
ஞத்துளொன்னார்,   மன்னை   மறைத்தவெங்  கோன்வையை   சூழ்பௌவ
நீர்ப்புலவந், தன்னை மறைத்திள ஞாழல்  கமழுந்தண்  பூந்துறைவா,  என்னை
மறைத்திவ் விடத்தியை யாதுகொ லெண்ணியதே” “திண்டேர் வயமன்னர் சேவூ
ரகத்துச் செரு வழியக் கண்டே கதிர்வேல் செறித்த  வெங்    கோன்கொல்லிக்
கார்ப்புனத்து, வண்டேய் நறுங்கண்ணி   கொண்டே   குறையுற   வந்ததனால்,
உண்டே முடிதலெனக்கு மறைப்பினு முள்ளகத்தே”
(பாண்டிக்கோவை)

3.விரை கமழ் சாரல் விளைபுனங்   காப்பர்.   வரையிடை   வாரன்மினைய-
உரைகடியர், வில்லினர் வேலர், விரைசெலு மம்பினர், கல்லிடை  வாழ்நரெமர்”
(திணை மொழியைம்பது, 5);“யானை யுழலு   மணிகிளர்   நீள்வரைக்கானக
வாழ்க்கைக் குறவர் மகளிரேம், ஏனலு ளைய வருதன்மற்   றென்னை   கொல்,
காணினுங் காய்வ ரெமர்”
(திணை மொழியைம்பது 6.)

4. “நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள்,   பொறிமாண்   வரியலவ   னாட்டலு
மாட்டாள், சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட் கெறிநீர்த்தண்