முதலெனப்பட்டது இடமும் காலமும் என்று உணர்வது. கருவெனப்பட்ட பொருள் 1செய்கை யொழித்துக் கொள்க. அதுவும் உரியும் பண்பெனப்படும்; இந்நான்கின் கூட்டமும் திணையெனப்படுமென்பது.(2) ஐந்திணையின் இடம் 3. | பொருப்பே வெம்பரல் புறவொடு பழனம் பரப்பமை வாரி குறிஞ்சிமுதற் 2பாகே. |
(எ-து.) ஐந்திணைக்கும் இடமுதல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மலைச்சாரலும், வெம்பரலத்தமும், சிறுதூறுடைப் புறவும். மலர்கஞலிய பழனஞ்சூழ்ந்த வயலும், கடலொடு கழிசார்ந்த பெருமண லெக்கரும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தெலன ஐம்பெருந்திணையின் நிலமுதலென்றவாறு.(3)ஐந்திணையின் பெரும்பொழுது 4. | கூதிர் வேனில் கொழுங்கா ரொழிபனி வேனில் முன்பனி மெய்யுயர் பொழுதே. |
(எ-து.) ஐந்திணைக்கும் காலமுதலுட் பெரும்பொழுது ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிர்க்காலமும், ஆனியும் ஆடியுமாகிய வேனிற்காலமும், ஆவணியும் புரட்டாசியுமாகிய கார்காலமும், மாசியும் பங்குனியுமாகிய பின்பனிக் காலமும், சித்திரையும் வைகாசியுமாகிய இளவேனிற் காலமும், மார்கழியும் தையுமாகிய முன்பனிக்காலமும் முறையானே ஐந்திணைக்கும் 3உயர் காலமுதலாம் என்றவாறு.(4) சிறுபொழுது 5. | இருணிலை யுச்சி மாலை வைகறை பொருணிலை 4யந்தி புணர்க்கும் பொழுதே. |
(எ-து.) சிறு காலமுதல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. 1. 9-ஆம் சூத்திரத்தைப் பார்க்க. 2. பாகு - பகுதி; “படுதிரை வையம் பாத்திய பண்பே” என்றார். தொல்காப்பியனாரும். 3. உயர்காலம் - பெரும்பொழுது. 4. “காலை யந்தியும் மாலை யந்தியும்” (புறநா. 34-8) என்பவாகலின் இங்கேநாட்காலையையும் ஏற்பாட்டையும் அந்தியென்றார். |