சேர்ப்பயா னென்சொல்லிச் சொல்கோ” (தொல். களவு. 23. ந. மேற்.) | ஓவியப் பாவை யொத்தனள் யாதுகொ லண் ணல்யான் சொல்லு மாறே”(34)( களவியற். 32, மேற்.) | இதுவுமது. | 16. 5. | “பெருவரை மிசையது நெடுவெள் ளருவி முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச் சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப நோதக் கன்றே காமம் யாவதும் நன்றென வுணரார் மாட்டும் சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே”( குறுந்.78.) | இதுவுமது. | 17. | “வம்ப வரவினி ராகலி னுணரீர் எம்பதத் தெளியளோ மடந்தை இம்பர் வாழ்க்கை யியவுண்மன் னெமக்கே”(35)
( களவியற். 33, மேற்.) | என்பது தலைமகள் அரியளென்றது. | 18. | “பொன்னியல் சுணங்கின் மென்முலை யரிவைக்கு மின்னிவ ரொளிவே லண்ணல் நின்னுறு விழுமங் கூறுமதி நீயே” (36)( களவியற். 32, மேற்.) | என்பது நின்குறை நீயே கூறென்றது. |
1. “நெருநலு முன்னா னெல்லையு மொருசிறைப், புதுவை யாகலிற் கிளத்த னாணி, நேரிழை வளைத்தோணின் றோழி செய்த, ஆருயிர் வருத்தங் களையா யோவன, எற்குறை யுறுதி ராயிற் சொற்குறை, எம்பதத் தெளியளல்ல ளெமக்கோர் கட்காண் கடவு ளல்லளோ பெரும, ஆய்கோன் மிளகி னமலையங் கொழுங்கொடி, துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும், மஞ்சு சூழ் மணிவரை மன்னவன் மகளே” (தொல்.களவு. 23. ந. மேற்.) 2. “தன்னையுந்தானாணுஞ் சாயலாட் கீதுரைப்பின், என்னையு நாணப் படுங்கண்டாய் - மன்னிய வேயேய்மென் றோளிக்கு வேறா வினியொரு நாள், நீயே யுரைத்து விடு” (தொல். களவு. 23. ந. மேற்.); “சேயே யென நின்ற தென்னவன் செந்நிலத் தேற்றதெவ்வர், போயே விசும்பு புகச்செற்ற கோனந்தண் பூம்பொதியில், வேயே யனையமென் றோளிக்கு நின்கண் மெலிவுறுநோய், நீயே யுரையாய் விரையா ரலங்க னெடுந்தகையே”, “புரைத்தா ரமர்செய்து பூலந்தைப் பட்டபுல் லாதமன்னர், குரைத்தார் குருதிப் புனல்கண்ட கோன் கொல்லிப் பாவையன்ன, நிரைத்தார் கருமென் குழலிக்கு நீயே நெடுந் துறைவா, உரைத்தா லழிவதுண் டோசென்று நின்றுநின் னுண்மெலிவே” (பாண்டிக்கோவை.) |