19. | ”1உளதா லம்மவோர் குறிப்பே யாவது வளையேர் முன்கை மடந்தைதன் முளையெயிற் றரும்பிய முகிழ்நகை தானே” | என்பது நகைகொண்டாற்றல் | 20. | “2பெறுதிற நாடினை மொழிமோ பெய்வளை நறுநுதன் மாதர் நகாஅ துறுதுய ரல்ல துய்யு மாறே”(38) | என்பது நகாதுரை யென்றது. | 21. | “3திருந்தா வாழ்க்கைச் சிறுகுடி யெமக்குப் பெருந்தகை யண்ண னின்னிடைப் பொருந்திய கேண்மையும் புரைவதோ வன்றே” (39)( களவியற்.33, மேற்.) | என்பது யாம் உமக்கு இயையோ மென்றது, | 22. | “4புயற்குழன் மடந்தையர் பூங்கரும் புலக்கையின் நகைக்கவி னவாய வாமென |
1. “மத்தகஞ் சேர்தனி நோக்கினன் வாக்கிறந் தூறமுதே, ஒத்தகஞ் சேர்ந்தென்னையுய்யநின் றோன்றில்லை யொத்திலங்கு, முத்தகஞ் சேர்மென்னகைப்பெருந் தோளி முகமதியின், வித்தகஞ் சேர்மெல்லெ னோக்கமன்றோ வென் விழுத்துணையே” (திருச்சிற்.106.) 2. நயனின் மையிற் பயனிது வென்னாது, பூம்பொறிப் பொலிந்த வழலுமி ழகன்பைப், பாம்புபி ரணங்கி யாங்கு மீங்கிது , தகாஅது வாழியோ குறுமக ணகா அதுரைமதி யுடையுமெனனுள்ளஞ் சாரற், கொடுவிற் கானவன் கோட்டுமாத் தொலைச்சிப், பச்சூன் பெய்த பகழிபோலச் சேயரி பரந்த வாயிழை மழைக்கண், உறாஅ நோக்க முற்றவென், பைத னெஞ்ச முய்யு மாறே” (நற். 75.)3. “தகைமாண் சிறப்பிற் சான்றோர்க்கொத்த, வகையமை வனப்பினை யாகலி னுலகமொடு, பாற்படற் பாலை மன்னோ காப்புடுத், தோங்குயரடுக்கத்துச் சாந்துவளர் நனந்தலை, நெடுவரை மருங்கிற் குடிமை சான்றோர் இன்ன ரென்னா தின்பம் வெஃகிப், பின்னிலை முயற்சியின் வருந்தினும் நும்மோ ரன்னோர்க்குத் தகுவதோ வன்றே” (தொல். கனவு. 23. ந. மேற்) “இவளே, கான னண்ணிய காமர் சிறுகுடி, நீனிறப் பெருங்கடல் கலங்கவுள் புக்கு, மீனெறி பரதவர் மகளே நீயே. நெடுங்கொடி துடங்கு நியம மூதூர்க், கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே, நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி இனப்புள் ளோப்பு மெமக்குநல னெவனோ, புலவு நாறுதுஞ் செலநின்றீமோ, பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை, நும்மொடு புரைவதோ வன்றே; எம்ம னோரிற் செம்மலு முடைத்தே” (நற். 45)4. “நீடுநீர்க் காண னெருநலு நித்திலங் கொண்டைய வந்திர் கோடுயர், வெண்மணற் கொற்கையெம் மூரிவற்றாற் குறைவிலம்யாம், ஆடுங் கழங்கு, |