தமிழ்நெறி விளக்கம் 15

மணிவிளக்கு மம்மனையும் பிறவு மெல்லாம், பாடி யவைப்பனவும் பந்தாடப்
படுவனவும் பனிநீர் முத்தம்” (இறை. 12, மேற்.); “துவைக்குந் துளிமுந்நீர்க்
கொற்கை மகளிர், அவைப்பதம் பல்லிற் கழகொவ்வா முத்தம்” (யா. கா. ஒழிபு.
மேற்.)

அவைக்குநர் மாதோ வலங்குகதிர் முத்தே” (40)

என்பது கையுறை யெளிமை கூறியது.

23.“மாணெழி லண்ணல் வாங்குதும் யாமே
சேணுயர் சிலம்பில் யாங்கணும்
காணல மன்னோவிக் கமழ்பூந் தழையே” (41)

(களவியற்.33, மேற்.)

என்பது கையுறை எமக்குத் தகாதென்றது.
24.“மாமலைச் சிலம்ப மயிலேர் சாயற்
றேமொழி நிலைமை தெரிந்தபின்
பூமென் றண்டழை கொள்குவன் புரிந்தே” (42)

(களவியற். 34, மேற்.)
 

என்பது தலைமகள் நிலைமை யறிந்து கொள்குவனென்றது.
25.“மாவென மடலு மூர்ப பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே”

(குறுந். 17.)

என்பது மடலேறுவனென்றது.
26.“கொள்ளலி ரம்ம வருளினி ராதலிற்
புள்ளின் பெருங்கிளை யலற
வள்ளிதின் விரிந்த மாப்பனை மடலே”(43)
என்பது மடலேற்று விலக்கியது.
27.“எளிதோ வம்ம வொளியிழை மடந்தை
கிளிபுரை கிளவியு நடையும்
இளமென் சாயலு மெழுதுமா றுமக்கே.” (44)
இதுவுமது,
28.“நன்னுத லாய மெவ்வயி னியலினும்
என்வழிப் படர்குவண் மாதோ
வின்முனை வாழ்நர் மென்மட மகளே.” (45)
இதுவுமது,
29.“அடுந்திறல் வேழ மகற்றி யெம்வயிற்
கடுந்துய ரொழித்தனை யாதலின் மடந்தை
கண்ணு மேனியும் புரையும்
தண்ணறுங் குவளையொடு தழைதந் தீயே” (46)
என்பது தழையெதிர் கோடல்.