தமிழ்நெறி விளக்கம் 16

30.“அன்னா யொருவரென் பொய்ம்மொழி நசைஇ
இன்னு மிவ்வழி வருகுவர்
என்னை யாமவர்க் கியம்புவ தினியே”(47)
என்பது மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல்
31.“காணாய் தோழிநம் மேனற் றண்புனம்
பேணா மன்னர் பெயர்புறங் கொடுத்தென
வைவேற் றானை வவ்வலிற்
செவ்வாய்ப் பாசினங் கவர்ந்துகொண் டனவே” (48)

(களவியற். 35, மேற்.)
 

என்பது நாணொடு நீங்கல். (பாசினம்-கிளி.)
32.“நெருந லிவ்வழிப் பெடைபுறந் தரூஉம்
அலவன் றன்னையு மென்னையு நோக்கி
நொந்தனன் பெயர்ந்த துறைவன்
வந்திலன் மாதோ வருந்துமென் மனனே”(49)
என்பது வலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தது.
33.“தானும் யானுமென் றிருவே றிலமே
யானு மறியாக் கரப்பினள்
மானுண் கண்ணி வரையர மகளே “(50)
என்பது தோழி தழீஇக்கொண்டது,
34.“தந்தோன் மேனாள் வெந்திறற் களிற்றின்
உறுதுய ரொழித்துய்த் தோனே நிறனழிந்து
வாடுப கொல்லோ மடந்தை
கோடுய ரடுக்கத்த கொயற்கருந் தழையே”(51)
என்பது கையுறை ஏற்பித்தது.
35.

 

5.

“தந்துநீ யளித்த தண்டழை காண்டலும்
வந்தன ளெதிர்ந்த மடந்தை நெஞ்சம்
மண்மிசை விளங்கிய வழுத்தூர் மதிதரன்
நுண்ணியிற் பனுவ னுழைபொரு ணுனித்த
வாய்மொழி யமிர்த மடுத்தவர் மனமென
ஆனிலை பெற்றன்றி யானறிந் திலனே” (52)

(நம்பி. 149, மேற்; களவியற். மேற்.)

என்பது கையுறை யெதிர்ந்தமை கூறிற்று.
36.“தழைகெழு சினைய பன்மரந் துவன்றிய
மழை தவழ் பூம்பொழில் யாவரும்
விழைதகைத் தம்மவெம் வியன்புன மருங்கே”(53)
என்பது பகற்குறியிடம் உரைத்தது.