தமிழ்நெறி விளக்கம் 17
37. “செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழறொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே”

(குறுந். 1)

என்பது தலைமகளைக் குறிவயின் நிறுத்திப் பெயர்ந்தது.
38. “பேதுறல் வாழிநின் காதற் றோழி
கைபுனை கோலமென மெய்பெற் றன்றே
ஐயம் யாவது மின்றிப்
பெய்பூங் கோதை பெருங்கவின் கொளவே” (54)

(களவியற். மேற்.)

என்பது தான் தோழியிற் புனைந்தமை உணர்த்தியது.
39

.

5.

“மணிநீர்ப் பொய்கை யணிபெற நிவந்த
தாமரை யனையளித் தூமலர்க் கண்ணி
ஞாயி றனையன் யானே யாவதும்
வெஞ்சொல் யான்வியந் துரைப்பவும்
எஞ்சாக் கவினிவ ணெய்த லானே”

(களவியற். மேற்.) (55)

என்பது தலைமகள் நிலைமை கூறியது.
40. “நறும்பூங் கண்ணியும் பெருந்தண் கோதையும்
நகைவாய்ப் பிணையலு முகைவாய்ச் சூட்டும்
புனைந்தனை யருளல் வேண்டும்
சினங்கெழு கானவன் செழுமட மகளே” (56)

(நம்பி 149, மேற்; களவியற். மேற்.)

என்பது கொண்டு நீங்கல்.

4. தோழியிற் கூட்டம்-இரவுக்குறி
18.

 

5.

 

காதன் மிகவின் வாய்விடு கிளவியும்
தோழி சிறைப்புறத் தேகிடு கிளவியும்
செறிப்பறி வுறுத்தலுஞ் சூளென நினைத்தலும்
இறப்ப நுவறலு மிருள்வர வேண்டலும்
 மறுத்தலு நேர்தலுங் குறியிடம் வகுத்தலும்
நயப்ப மொழிதலு மவன்வர வுணர்த்தலும்
குறித்துழி யுய்த்தலும் பெயர்ச்சியொ டல்குறிச்
சிறைப்புற மாகச் செப்பலு நோதலும்
இறைப்புற மாகிய விரவுக் குறியே.
 
(எ - து) 
இரவுக்குறியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.