தமிழ்நெறி விளக்கம் 18

 (இ - ள்)வாய்விடு கிளவி முதலாகத் தலைமகன் நெஞ்சொடு நோதல்
ஈறாகச் சொல்லப்பட்டன, 1இல்வரை இகவா இரவுக்குறியாம் என்றவாறு.
 

1. 2அடும்பின் மென்கொடி துமியக் கடும்பகற்
கொடுங்கழி மருங்கின்வந் தகன்ற
நெடுங்தே ரண்ணல்பின் சென்றதென் னெஞ்சே”(57)

(களவியற் மேற்.)

என்பது தலைமகள் ஆற்றாமைக்கண் வாய்விடு கிளவி.
2.3செவ்வா யன்னநின் சேவலு நீயும்
கைவே லண்ணலைக் கழறின்
எய்துவ துளதோ வியம்புமி னெமக்கே.” (58)
 
இதுவும் அது.
3.“ஆய்கதிர்ச் செல்வ 4னத்தஞ் சேர்ந்தென
நோய்கூர் நெஞ்சின ளுழப்பப்
போயின மாதோ புள்ளினம் பிரிந்தே” (59)

(களவியற்  மேற்.)

என்பது தலைமகன் சிறைப்புறமாகப் பிறிதின்மேல் வைத்துத் தோழி கூறியது.
4.5மாலை மணந்து காலைப் பிரியும்
காதல ருடையையோ கறைநீங்கு மதியம்
 

1. “இரவுக் குறியே யில்லகத் துள்ளும், மனையோர்  கிளவி   கேட்கும் வழி
யதுவே, மனையகம்  புகாஅக்  காலை யான”  (
தொல். களவு. 40)  “இரவுக்
குறியேயில்வரை யிகவாது,’ (
இறை.20); “இரவுக்  குறியே யில்வரை  யிகவா,
துணரவுரைத்த வுரையி னான” (தொல். களவு. மேற்.); “இரவுக்குறி, இல்வரை
யிகவாவியல்பிற் றாகும்” (
நம்பி.38.)

2. “கவட்டிலை  யடும்பின்,  செங்கேழ்  மென்கொடி யாழி யறுப்ப இனமணிப்
புரவி   நெடுந்தேர்  கடைஇ”  (
அகநா80 : 8 - 10);   “சென்றது   கொல்...
மொய்ம்மலர்த்தார் மாறற், குழந்துபின் சென்றவென்  னெஞ்சு”  (
பழம்பாடல்;
“பொருமா மணிமுடி மன்னரைப் பூலந்தைத் பூவழித்த, குருமா  மணிவண்ணன்
கோனெடு மாறன்  குமரிமுந்நீர்,  அருமா  மணி  திகழ்  கானலின்  வாய்வந்
தகன்றகொண்கன், திருமா மணிநெடுந்  தேரோடு  சென்றதென்  சிந்தனையே”
(பாண்டிக்கோவை).

3. “ஒண்டூவி நாராய்நின் சேவலு நீயுமாய், வண்டூது   பூங்கானல்   வைகலுஞ்
சேறிரால்,  பெண்டூது   வந்தே   மெனவுரைத்தெங்   காதலரைக்,   கண்டீர்
கழறியக்காற் கானல்  கடிபவோ”   (
தொல். களவு. 20,  ந மேற்.)

4. அத்தம்   -   அத்தகிரி;    “அத்தமென்னும்,    பொன்னஞ்    சிலம்பு’;
(பாண்டிக்கோவை)

5. “கங்குற் சிறந்து பகலொளி வாடநின்    காதலரும்,   எங்கட்    கிசைந்த
விறைவர்கொல் லோவிமை   யோரெவரும்,   துங்கக்    கொடுமடி   மந்தர