தமிழ்நெறி விளக்கம் 20

னிய பெருங்குர லேனல், கிளிபட விளைந்தமை யறிந்துஞ் செல்கென, நம்மவண் விடுநள் போலாள் கைம்மிகச் சில்சுணங் கணிந்த செறிந்துவீங்கிளமுலை, மெல்லிய லொலிவருங் கதுப்பொடு, பல்கா னோக்கு மறனில் யாயே” (அகநா. 308.)

8.1அம்மென் சாய லாயிழை திறத்துப்
பொய்ம்மை நின்வா யுளதெனின்
மெய்ம்மை யாரோ விளம்புநர் பிறரே”(64)
என்பது சூளென நினைந்தது.
9.“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே”

(குறுந்.18)

என்பது ஆற்றாளென்பதுபடக் கூறியது.
10.“ஒள்ளிணர் வேங்கை யொள்ளிணர் வேங்கைநின்
கிளையொடு மகிழாக் கிளைதபு வேங்கை
நீயே மலர்தந் தோயே
2ஆயோ வெனுங்குர லாவயிற் கடிந்தே”(65)
 என வருவனவும் கொள்க.
11.“வரிவளைத் தோளி யொருதனி யொழியப்
பிரிது மென்றி யாயிற் பெரிதழிந்து
பரியல் வாழியோ நெஞ்சே
இருளிடை யேகலு மெய்துமா னமக்கே” (66)

(களவியற் மேற்.)

என்பது இருள்வர வேண்டல்

1. “நும்மோ ரன்னோர் மாட்டு மின்ன, பொய்யொடு மிடைந்தவை  தோன்றின், மெய்யாண்டுளதோவிவ்வுலகத்    தானே” (அகநா. 286 : 15-7) “நெய்யொன்று; வேனெடு  மாறன்றென் னாடன்ன   நேரிழையிம்,   மையொன்று;   வாட்கண் மடந்தை      திறத்திட்டறந்திரிந்து,   பொய்யொன்று   நின்கண்ணிகழுமென் றாற்பின்னைப் பூஞ்சிலம்பா, மொய்யொன்று மின்றி யொழியுங் கொல் லோவிவ் வியலிடமே”, திரைப்பா லிரும்புனற் சேவூரெதிர்நின்ற சேரலர்கோன், வரைப்பா லடையச்செற் றான்வையை யன்னாடிறத்து வண்டார்,   விரைப்பானறுங்கண்ணி யாய்பொய்ம்மை நீ சொல்லின் மெய்ம்மை   யென்ப,   துரைப்பார்   பிறரினி யாவர்கொல் லோவிவ் வுலகினுள்ளே” (பாண்டிக்கோவை)

2. “ஆயோ      வெனுங்குரலந்தோ   புனத்தை    யழிக்கின்றதே” (தனிப்); “வெஞ்சொற் பேசும்   வேடர்    மடவாரிதண    மதுவேறி,    அருஞ்சொற் கிளிகளாயோ வென்னு மண்ணா மலையாரே” (தே, திருஞா.)