தமிழ்நெறி விளக்கம் 21
12.“நிரைதா ரண்ண னெடுங்கழை யுகுத்த
விரிகதிர் நித்திலம் விரித்தலின்
இரவும் பகல்போன் றிலங்குமா லிவணே” (67)

(களவியற்மேற்.)

என்பது இரவின் வருதல் அரிதென்றது.
13. “தேரா னல்லன் பேருணர் வினனே
இகந்தோ னல்ல னன்புபெரி துடையன்
இனையோ னினைய னாகுதல்
மனனிறை குன்ற வாற்றா மாறே”(68)
என்பது நேர்தல்.
14.1நறைகமழ் சாந்தமெஞ் சாந்தே பூவும்
பொறைமலி காந்தளம் பூவே யாடிடம்
சிறைவண் டார்க்குஞ் செயலையம் பொழிலே” (69)

(களவியற்மேற்.)

என்பது இரவுக்குறியிடம் கூறிற்று
15.2வேய்பயி லிறும்பின் வியலறைச் சிலம்பின்
வால்வெள் ளருவி முழவிற் றதும்பும்
சேயுயர் மாமலைச் சிலம்பனும்
ஆய்நுத லரிவை யருகினன் பெரிதே”(70)
என்பது இரவுக்குறி நயப்பித்தது.
16. “ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்
சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொன்முரண் சோருந் துன்னருஞ் சோலை
நடுநாள் வருதலும் வரூஉம் 5,வடுநா ணலமே தோழி நாமே”

(குறுந் 88)

என்பது மறுத்தது.
17. “கொடுவரி வயப்புலி தாக்கக் கொலையுய்ந்து
நடுநாள் யாமத் தருஞ்சுர நீந்திப்
பதிவயிற் புகுந்தோற் கியாவதும்
கதவந் திறத்தல் கனங்குழை கடனே”(71)
என்பது வலிதாகச் சொல்லி நயப்பித்தது.

1. “வந்தணங் காமன்னர் தேயமுன் னாண்மழை  யேயுயர்த்த,   கந்தணங்காமத
யானைக் கழன்மன்னன்   கார்ப்பொதியிற்,   சந்தனஞ்   சாந்துசெங் காந்தளம்
பூத்தழல்  போல்விரியும்,   கொந்தணங்     கீர்ம்பிண்டி    யாம்விளையாடுங்
குளிர்பொழிலே”, “காந்தளம் போதெங் கருங்குழற் போது கடைய லொன்னார்,
தாந்தளர்ந் தோடவை வேல்கொண்ட வேந்தன்றண் ணம்பொதியிற், சாந்தமெஞ்
சாந்தம் விளையா டிடமுந் தளையவிழும், பூந்தளம் பிண்டி யெரிபோல் விரியும்
பொழிலகமே” (
பாண்டிக்கோவை.)

2. “பெருவரை மிசையது நெடுவெள் ளருவி,  முதுவாய்க்   கோடியர்  முழவிற்
றதும்பி” (
குறுந்.78. : 1 - 2.)