தமிழ்நெறி விளக்கம் 22
18.1புள்ளுந் துயில்புடை பெயர்ந்தன புனலுள்
வள்ளிதழ்ப் புன்னை மணிக்காய் வீழும்
வந்தனன் கொல்லோ தானே
வெந்நிற லண்ண னினைந்தனன் விரைந்தே” (72)

(களவியற் மேற்.)

என்பது தோழி வரவுணர்ந்தது.
19. 2அன்னா யன்னாய் காணென் றிருமுறை
தன்யா னெடுப்பவுந் துயின்மடிந் தனளே
இலங்கிலை நெடுவே லண்ணலும்
புலம்புதுய ரகலக்குறிவந் தோனே” (73
)

(களவியற் மேற்.)

என்பது வரவுணர்த்தியது.
20.3கள்ளவிழ் கோதைநின் கண்போற் குவளையும்
முள்ளெயி றரும்பு முல்லையும்
கொள்குவம் போதுநங் குளிர்பொழி லிடத்தே” (74)

(களவியற் மேற்.)

என்பது தலைமகன் வரவுணர்ந்து தோழி தலைமகளைக் குறிவயின் உய்த்தது.
    

1. “அன்னை வாழியோ வன்னைநம்  படப்பைப்,  பொம்ம  லோதி  யம்மென்
சாயல்,   மின்னென   நுடங்கிடைக்   கின்னிழலாகிய,  புன்னை   மென்காய்
போகுசினை யிரிய, ஆடுவளி தூக்கிய  வசைவிற்   கொல்லோ,   தெண்ணீர்ப்
பொய்கையுள் வீழ்ந்தென, எண்ணினை யுரைமோ வுணர்குவல் யானே” (தொல்.
களவு 42, ந, மேற்.); “புட்சிலம்பு  கின்றமையாற்   புன்னைக்காய்   பூம்புனலி,
னுட்சிலம்ப வீழ்கின்ற வோசையாற் - கட்சிலம்பு,   கொந்தார்   நறும்பொழிலி
னுள்ள  குறியிடத்து,     வந்தான்கொல்    கள்வமகன்”   (கிளவித் தெளிவு);
‘தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற காலத்து ஒருநாள்    தலை  மகன்
செல்லாமே” அவனாற் செய்யப்படும் குறிப்புக்கள்   தாமே    வெளிப்பட்டன.
அவை புன்னைக்காய் நீரி லிடுதலும்,   புள்ளெழுப்புதலுமென   இவை. அவை
வேறானும் நிகழுமாறு:  புன்னைக்காய்  மூக்கூழ்த்தும்  விழும்;  வளியெறியவும்
விழும் புள்துளக்கவும் விழும்’ (இறை. 17, உரை.)

2. “அன்னாய் வாழி   வேண்டன்னைநம் படப்பைத்,    தண்ணயத்   தமன்ற
கூதளங் குழைய,   இன்னிசை   யருவிப்பாடு  மென்னதூஉம்,    கேட்டியோ
வாழிவேண் டனனைநம் படப்பை,   ஊட்டியன்ன   வொண்டளிர்ச்   செயலை
ஓங்குசினைத் தொடுத்த வூசல் பாம்பென, முழுமுத றுமிய வுருமெறிந்  தன்றே,
பின்னுங் கேட்டியோ வெனவுமஃதறியா, தன்னையுங்   கனைதுயின்   மடிந்தன
ளதன்றலை, மன்னுயிர் மடிந்தனறாற் பொழுதே காதலர், வருவ ராயிற்   பருவ
மிதுவெனச் சுடர்ந்திலங் கெல்வளை  நெகிழ்ந்த  நம்வயிற் , படர்ந்த  வுள்ளம்
பழுதன் றாக, வந்தனர் வாழி தோழி” (அகநா. 68: 1-14)

3. “ஆழிக் கடல்வையங் காக்கின்ற கோனரி கேசரிதன்,   பாழிப்   பகைசெற்ற
பஞ்சவன் வஞ்சிப்பைம் பூம்புறவிற், பூழிப் புறமஞ்ஞை யன்ன