தமிழ்நெறி விளக்கம் 23

     (இ-ள்.) நடுவுபட்ட  இருள்யாமமும், கதிர் காயும் உச்சிப் பொழுதும்,
மாலைப்பொழுதும்,  புலர்காலையும்,  அந்தியும்,  எற்பாடும்    முறையானே
ஐந்திணைக்கும் சிறுகால முதலாமென்றவாறு. (5)

கருப்பொருள்

6.தெய்வ மானிடஞ் செய்தி யுணவோ
டெய்திய விசைவிலங் கினையன பிறவும்
பொய்தீர் கருவெனப் புகன்றனர் கொளலே.

     (எ-து.) கருப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.) சொல்லப்பட்ட முதற்பொருட்குரிய தெய்வமும், அவ்வழிவாழும்
மக்களும், அவர்களும் தொழில்களும்,  1உண்பார்க்குத்  துப்பாகிய  உணவும்,
இசையும், ஆங்கண் வாழும் விலங்குகளும்,  பிறவும்  ஐந்திணைக்குப  பெற்ற
கருப்பொருளாமென்றவாறு. (6)

தெய்வம்

7.முருகனு 2மிரவியு மாயனும் 3வேந்தனும்
வருணனு மாக வகுத்தனர் கொளலே.

     (எ-து.) சொல்லப்பட்ட கருவினுள் அதிதெய்வம் ஆமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ-ள்.) முருகவேளும்: பகலோனும், மாயனும்,  இந்திரனும்  வருணனும்
முறையானே ஐந்திணைக்கும் அதிதெய்வ மென்றவாறு. (7)


    1. “துப்பார்க்குத் துப்பாய துப்பு”(குறள்-12.)

    2. ‘ஞாயிற்றைத்  தெய்வமாக்கி  அவனிற்  றோன்றிய  மழையினையும்
காற்றினையும்  அத்தெய்வப்  பகுதியாக்கிக்   கூறப’
(தொல். அகத் 5. ந.)
என்றும், தொல்காப்பியர் பாலைக்கு நிலம்வேண்டிற்றினர்;  வேண்டாமையின்
தெய்வமும் வேண்டிற்றிலர்; பிறர் பகவதியையும்
 ஆதித்தனையும்  தெய்வ
மென்று வேண்டுவர்’  (
இறை. 1. உரை)  என்றும்  எழுதியுள்ளவை இதனை
நோக்கிப் போலும். ‘தெய்வம் ஆசிரியர்  புலப்பட  எடுத்தோதிற்றிலரேனும்....
பருதியஞ் செல்வனும் திகிரியஞ் செல்வியுமெனக் கொள்க’  (சிலப்.  பதி.
அடியார்.);
    ‘அந்நிலத்துக்குப்   பரமேசுவரியைத்   தவிர  ஆதித்தனும்
தெய்வமென்று சொல்லுவர்’ (தக்க. 55 உரை.)

    3. வேந்தன் - இந்திரன்; “வேந்தன் மேய தீம்புன லுலகமும்’  (தொல்.
அகத். 5.)