தமிழ்நெறி விளக்கம் 26

5. வரைவு கடாதல்

19.

 

5.

வருநெறி நினைந்து வாரலென்றலும்
காப்பிடை யீட்டிற் கையறு கிளவியும்
வருக வென்றலும் வார லென்றலும்
படைத்து மொழிதலுங் குடித்திறங் கூறலும்
அரிவையை யின்றியா னறிந்தே னென்றலோ
டுரியன கிளந்த பிறவுந் தொகைஇ
வரைவு கடாத லாகு மென்மனார்.
என்பது வரைவுகடாதல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.)ஆறுபார்த்துற்ற அச்சுக் கிளவியும், வரவு விலக்கலும், காப்பின்
இரங்கியகையறு  கிளவியும்,    இரவினும்    பகலினும்    நீவா   என்றலும்,
வாரலென்றலும், படைத்து மொழிதலும், குடித்திறம் கூறலும், மானிட மகளாதல்
இன்று  அறிந்தேனென்றலுமென     இன்னவெல்லாம்   வரைவுகடாதலென்று
சொல்லுவர் புலவர் என்றவாறு.