1. | “1ஆறே யரிய வென்னா யாறே மல்குபுனல் பரந்து கல்லுயர்ந் தனவே இரவின் வருவர்நங் காதலர் உரவேன் றோழியா னுயிர் வாழ் வேனே”(78) |
என்பது ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி. |
2. | “வாரா தீமோ சார னாட 2உறுபுலி கொன்ற சிறுகண் யானை ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம் ஊறுபெரி துடைய தமியை நீயே”
( சிற்றட்டகம் களவியற், மேற்.) |
என்பது வரவு விலகிற்று. |
3. 5. | 3யாயே துயின்மறந் தனளே யாயினும் நாயு மூரு நனிதுஞ் சலவே காவ லாள ரதனினுந் துயிலார் ஆய்கதிர் மதியநின் றலரும் யாவ தாங்கொ லேந்திழை நிலையே”(79) ( களவியற் மேற்.) |
என்பது காப்பின் இரங்கிக் கையாறுகிளவி. |
4 | “பகலே வரினு மாற்றாள் பகலின் றிரவின் வரினு மந்நிலை யினளே விரைசேர் மார்ப செய்திறம் விளம்பே”(80) |
என்பது இரவினும் பகிலினும் நீவாவென்றது. |
5. | “4முருகற் செவ்வியொடு பகல்வரி னிவ்வழி விரவியற் கவ்வை யஞ்சுதும் இரவரி னதனினும் பெரிதஞ் சுதுமே” (81)( களவியற் மேற்.) |
என்பது இரவினும் பகலினும் வாரலென்றது. |
1. “ஆறே யருமர பினவே யாறே, சுட்டுநர்ப் பனிக்குஞ் சூருடை முதலைய, கழைமாய் நீத்தங் கல்பொரு திரங்க, அஞ்சுவந் தமிய மென்னாது .................. ... வாணடந் தன்ன வழக்கருங் கவலை, உள்ளுந ருட்குங் கல்லடர்ச் சிறுநெறி, அருள்புரி நெஞ்சமொ டெஃகுதுணை யாக, வந்தோன் கொடியனுமல்லன்” (அகநா. 72. 7-19.) 2.“காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல், ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம்” ( அகநா. 65: 16-7.) 3.“இரும்பிழி மகாஅரிவ் வழுங்கன் மூதூர்” ( அகநா. 122) என்னும் செய்யுளைப் பார்க்க.4.“கந்த னெனநீ கதிர்வேல் வலனேந்திச் செந்தினைசூழ் குன்றச் சிறுகுடிவாய் - வந்தருளி, நின்றா லிளவுளர்கண் மெய்யுணரி னேரிழைக்கு, நன்றாத லுண்டோ நவில்” ( பழம்பாட்டு); “துறுக ணண்ணிய கறியிவர் |