படப்பைக், குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரும், மெய்ம்மலியுவகைய னந்நிலை கண்டு, முருகென வுணர்ந்து முகமன் கூறி, நெடுவேட் பரவுமன்னை” ( அகநா. 272: 10-15); “தாமரைக் கண்ணியைத் தண்ணறுஞ் சாந்தினை, நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின், மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம், அணங்கென வஞ்சுவர் சிறுகுடியோரே” (கலி.52: 7 - 10.) 6. | “1கழிப்பூங் கான லிவ்வழி நெருநல் வழிப்படர்ந் துண்டோர் தேரென அழித்து நோக்கின ளெம்மனை பெரிதே” (82) | என்பது தோழி படைத்து மொழிந்தது. | 7. | “2கழைகெழு சிலம்பி னருவி யாடும் மழைமத யானையொடு பிடிகண் டுழைகெழு நோக்கி யுன்னினள் பெரிதே” (83) ( களவியற் மேற்.) | இதுவும் அது. | 8. | “வரைதல் வேட்டனி ராயிற் பதிவயின் எதிர்கொள் செவ்விய ரெமரே யிவ்வயின் நறுநுதற் பெருந்தோட் பேதையும் சிறுகுடிக் கானவன் பெருமட மகளே” ( களவியற் மேற்.) | என்பது குடித்திறம் கூறியது. (84)
1.“பானாட் டனித்தோர், தேர்வந்து பெயரு மென்ப வதற்கொண்’ டோரு மலைக்கு மன்னை” ( குறுந். 246: 3-5); “பெருநீ ரழுவத் தெந்தை தந்த, கொழுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி, எக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇச்’. செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி, ஞாழ லோங்குசினைத் தொடுத்த கொடுங்கழித், தாழை வீழ்கயிற்றூச றூங்கிக், கொண்ட லிடுமணற் குரவை முனையின், வெண்டலைப் புணரியாயமொ டாடி மணிப்பூம் பைந்தழை தைஇயணித்தகப், பல்பூங் கானலல்கினம் வருதல், கவ்வை நல்லணங் குற்றவிவ்வூர்க், கொடிதறி பெண்டிர் சொற்கொ டன்னை, கடிகொண் டனளே தோழி பெருந்துறை, எல்லையு மிரவு மென்னாது கல்லென, வலவ னாய்ந்த வண்பரி, நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே” (அகநா. 20); ‘அன்னாய் நெருந னிகழ்ந்தது கேளயல் வேந்திறைஞ்சும், பொன்னார், கழனெடு மாறன் குமரியம் பூம்பொழில்வாய், மின்னார் மணிநெடுந் தேர்கங்குல் வந்தொன்று மீண்டதுண்டால், என்னா முகஞ்சிவந் தெம்மையு நோக்கின ளெம்மனையே” (பாண்டிக்கோவை.)2.பருவர னெஞ்சமொடு மேவ றவிராது, செருவே லுதியன் சேண் விளங்கு முசுறிக், கருங்கழிக் காவியொடு கலாஅங் கருதிய, பெருங்கண்மாயோளே நரங்கடி கொண்ட, செந்தினை கவர்ந்த பைங்கண் வேழம், கருவரைப பிரசங் கையின் வாங்கி, ஈயின மிரிய வீசி வயவுப்பிடி, வாயுறக் |
| |
|
|