கொடுத்த செவ்வி நோக்கி, யுருகு நெஞ்ச மோடு நீடுநினைந், தருகுசென் ஞமலியு மென்னையு நோக்கிக், கழலொலி கரப்ப வொதுங்கி, நிழலென நிற்ப னொருநினை நினைந்தே” (நம்பி, 148, மேற்.); “பண்ணிவர் சொல்லி கண் டாடென்னன் பாழிப் பகைதணித்த, மண்ணிவர் சீர்மன்னன் வாணெடு மாறன் மலையமென்னும், விண்ணிவர் குன்றத் தருவிசென் றாடியொர் வேங்கையின்கீழ்க், கண்ணிவர் காதற் பிடியொடு நின்ற கருங்களிறே” (பாண்டிக்கோவை). 9. | “இதற்கொண் டினியாந் தெளிது மேனாள் மதிக்கோ டுரிஞ்ச மால்வரை வாழ்க்கைக் கடவு ளாக வல்லது மடவரன் மாதரை மதித்தன்றோ விலமே” (85)( களவியற். மேற்) (19) | என்பது இன்றுஅறிந்தேனென்றல். | 6. உடன்போக்கு வலித்தல் | 20. 5. | அலர்பெரி தென்றலு மயல்வரை வுரைத்தலும் உலகியல் கூறி நீயுரை யென்றலும் சுரஞ்செல வாற்று நின்னோ டென்றலும் வருந்திற முரைத்தலும் வழிநயப் பித்தலும் விரும்பின னேர்ந்த பாவக் கிளவியும் பொருந்து மென்மனார் போக்குடன் வலித்தல்.( களவியற் மேற்.) | என்பது உடன் போக்கு வலித்தலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. | (இ-ள்.) அலர் பெரிதென்றல் முதலாகப் பாவக் கிளவி ஈறாகச் சொல்லப்பட்ட கிளவிகளை உடைத்தென்று சொல்லுவர் உடன் போக்கு வலித்தலை எ - று. 1.. | “1நிலவோ ரன்ன வெண்மணற் பாக்கத்து மலரேர் கூந்தன் மடந்தைக் கலரா கின்றா லண்ணனின் னருளே” (86) ( களவியற் மேற்.) | என்பது முன்னின்று அலர் பெரிதென்றது. 1.அம்பல் பெருகி யலரான தல்லிதொறும், தும்பி முரலுஞ் சரி கூந்தற்- கொம்பனைய, பண்ணறா மென்சொல்லி பால்வந்து பல்காலும் அண்ணறான் செய்யுமருள்” (கிளவித்தெளிவு); “பலரா யெதிர்நின்று பாழிப்பட் டார்தங்கள் பைந்நிணம்வாய், புலரா வசும்புடை வேன்மன்னன் வேம்பொடு போந்தணிந்த, மலரார் மணிமுடி மான்றேர் வரோதயன் வஞ்சியன்னாட், கலராய் விளைகின்ற தாலண்ண னீசெய்த வாரருளே”, “பொருடானெனநின்ற மானதன் பூலந்தைத் தோற்றுப்புல்லார், இருடா னடைகுன்ற மேறவென் றோன்கன்னி யீர்ம்பொழில்வாய், மருடா னெனவண்டு | |
| |
|
|