2. | “அணிகொணர்ந் தனரே யயலோ ரண்ணல் துணிவுறு செய்கி யாதுகொல் மணிபுரை கூந்தன் மடந்தைதன் வயினே” (87) (களவியற் மேற்.) |
என்பது அயல்வரைவுரைத்தது |
3. | “பணிநாட் டாமரை போலப் பையத் துனியா கின்றா னெஞ்ச மெல்லியல் மின்சேர் நுண்ணிடை திறத்தினி என்செயற் பால விலங்கிழை தாமே” (88)
(சிற்றட்டகம் களவியற், மேற்.) |
என்பது தோழியைத் தலைமகன் வினாயது. |
4. | “யானெவ னறிகோ வண்ணல் வானொடு நானில முழுதும் பெறினும் பேணா ரம்ம விவள்பூண் முலைக்கே” (89) (களவியற் மேற்.) |
என்பது யான் அறியேன், நீயுரை என்றது. |
5. . | “தீயினும் வெய்ய வென்குவை யாயின் யாவது மினிய கானம் சேயுயர் சிலம்பு நின்னொடு செலினே” (90) (களவியற் மேற்.) |
என்பது சுரஞ்செல வாற்றும் நின்னோடு என்றது. |
6. | “தேரும் பிறவும் நீக்கி யில்லயல் யாவரும் பயிலா வொருசிறை வார்பூஞ் சிலம்ப வருதனின் கடனே” (91)(களவியற் மேற்.) |
என்பது வருந்திறம் மொழிந்தது. |
7.. | “ஊருஞ் சேரியு மலரெழ யாயும் தானே யிருக்க தன்மனை யானே திருந்துவேல் விடலையொடு கெழீஇ அருஞ்சுரஞ் சேறல் புரிந்தன னினியே” (92)(களவியற் மேற்.) |
என்பது உடன்போக்கு நயப்பித்தது. |
.8. 5. | “கானங் கார்பெயத் தண்ணென் நன்றே வாள மதியு நாணிலா வுதவும் அன்னை துயரமு நின்னையர் வெகுளியும் தணிக்குவன் மன்னோ யானே மணிக்குழன் மாதரைக் காணயான் மறுத்தே”(93)(களவியற் மேற்.) |
இதுவும் அது. |