21. | 1முக்கட் கூட்ட முதலா நான்கும் தொக்கிய லொழுக்கங் கற்பெனத் தோன்றும். என்பது கற்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்)அறத்தொடு நிலையும், உடன் செலவும், 2சேயிடைப் பிரிவும், ஆயிடைப் பிரிவும் எனப்பட்ட நான்கும் தொக்க ஒழுக்கமும் முக்கட் கூட்டமுடைய கற்பென்று சிறப்பிக்கப்படும் எ-று. (21) |
1. அறத்தொடு நிலை |
22. 5. 10 | மறுதலை யில்லா மாண்பியல் கிளவியிற் றலைவி தோழிக் கறத்தொடு நிற்றலும் செவிலி புகழ்தலுந் தோழி யுணர்த்தலும் முதுவாய்க் கட்டுவி முருகென மொழிதலும் அதுகுறித் தினைதலு மறல வினவலும் பொய்யென மொழிதலும் பொன்றத் துணிதலும் கையன் றென்றலுங் காரிகை நேர்தலும் பாங்கி வெறிக்கட் படர்க்கைமுன் னிலையும் ஈன்றோ டன்வயிற் கைத்தா யியம்பலும் வரைவெதிர் மறுத்தலு மையலுந் தெளித்தலும் கிளந்த தமர்வயி னற்றாய் கிளத்தலும் இளையோற் கெதிர்தலும் வெளிப்படை யென் மனார். |
என்பது அறத்தொடுநிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. |
1. களவியற். 43, மேற்.2. ‘வரைந்தெய்தியபின் தலைமகன் அறம்பொருளின்பங்களின் |