பொருட்டுச் சேயிடையினும்
ஆயிடையினும் தலைமகளைப்
பிரிந்து செல்லும், (குறள்,
கற்பியல், அவதாரிகை.)
(இ-ள்)
1கற்பினோடும் காவலோடும்
நலத்தினோடும்
குலத்தினோடும் உலகினோடும்
மாறுகோள் இல்லா மொழியால்
தலைமகள் தோழிக்கு அறத்தொடு
நிற்றல் முதலாக வரைவெதிர்கோடல்
ஈறாகச் சொல்லப்பட்ட இவை
அறத்தொடு நிலையாமென்று
சொல்லுவர் புலவர். எ -
று.
1. |
“2தோழி வாழி மேனா ளொருவன் ஆழ்கய மருங்கி னழுந்தத்
தாழ்பெருந் தடக்கையின் வாங்கினன் றகைத்தே” (94)( களவியற்
மேற்.) |
என்பது தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்றது. |
2. |
“நுணுகிய நுசுப்பி னகன்றேந் தல்குற் பணைமுலைக் கருங்கட்
செவ்வாய்ப் பேதை திருநலம் பெறூஉம் பெருந்தகை ஒருநல் லின்னுயி
ராயினள் பெரிதே” (95) |
என்பது செவிலி தலைமகளை நாட்கோலஞ் செய்தது. |
3. |
“யாண்டுளன் கொல்லோ தானே மான்குழை மொய்யிருங் கூந்தன் முடியாப்
பருவத்துப் |
|
( களவியற்
மேற்.)
|
|
1.“தோழிக் குரியவை கோடாய் தேஎத்து, மாறுகோளில்லா மொழியுமா ருளவே”
(இறை. 14) என்பதனையும், ‘எற்றினொடு மாறு கொள்ளாமையோ வெனின்,
தாயறிவினொடு மாறுகொள்ளாமையும், தலைமகன் பெருமையொடு
மாறுகொள்ளாமையும், தலைமகளது கற்பினொடு மாறுகொள்ளாமையும், தோழி
தனது காவலொடு மாறுகொள்ளாமையும் நாணினொடு மாறு கொள்ளாமையும்,
உலகினொடு மாறுகொள்ளாமையுமெனக் கொள்க என்னும் அதன் உரையையும்
பார்க்க. 2.“ஓங்கிய வெண்குடைப் பைங்கழற் செங்கோலுசிதன்வையை
வீங்கிய தண்புனலாடி விளையாட்டயர்பொழுதிற், றேங்கிய தெண்டிரை
வாங்க வொழுகிநின் சேயிழையாள், நீங்கிய போதருள் செய்தனன் வந்தோர்
நெடுந்தகையே”, “சின்னாண் மறந்திலம் யாமுந்தென் சேவூர்ச்
செருமலைந்த, மன்னாள் செலச்செற்ற வானவன் மாறன்வை யைத்துறைவாய்ப்,
பொன்னார் புனலெம்மை வாங்கும் பொழுதங்கொர் பூங்கணைவேள்,
அன்னானொருவனனைந்தெமக் குச்செய் வாரருளே” (பாண்டிக்கோவை),
“ஆடுந்துறையிலருவினை யேன்கை யகன்றரிவை, ஓடும் புனலிலொழுகிய
நாளெம் மழுகுரற்கேட், டேடொன்று பூந்தொடை யேந்தன்முன்னீந்தி
யெடுத்தணைத்து, நீடுந்தடங்கரை நில்லுமென்றானெம்மை நேரிழையே” (அம்பிகாபதி
கோவை 356.) |
|
|
|