தமிழ்நெறி விளக்கம் 33
பெறுக நின்னை யானென
நறுநுத னீவிப் படர்தந் தோனே” (96)

 
என்பது 1செவிலி தலைமகளைப் புனைந்து ‘யாரோ இவளை எய்துதற்குரிய பெருந்தகை’ எனத் தோழி அறத்தொடு நின்றது.
 

4. 2எய்யா வுள்ளமோ டினையல் வாழியெம்
மைதபு கழங்கிற் பட்டது முளதே, யதுதான்
மையில் காட்சியின் வயங்குயிர் மயங்கிய
தெய்வ வாணுரு வாகுத றெளிவே” (97)

(களவியற். மேற்)

என்பது தலைமகள் வேறுபாடு கண்டு செவிலி வினவக் கட்டுவிச்சி சொல்லியது.

 

5.3அறியா ளன்னை வெறிமுறை தொடங்கும்
எவனா கியரோ நெஞ்சே பிழையாக்
குலஞ்சா லொழுக்கமு நாணும்
நலஞ்சால் கற்பு மில்லுழி யெமக்கே” (98)
என்பது செவிலி வெறி கால்கொள்ளத் தலைமகள் இரங்கியது.
6. “வீயா மரபி னொருதிற னாடி
ஆவயி னுரைப்பி னெவனோ தோழி
‘நாமு முந்நீர் போலக்
காம வெந்நோய் கையிகந் தன்றே” (99)

 
என்பது தலைமகன் ஆற்றாமை யுணர்ந்த தோழி அறத்தொடு நிற்றல் தக்கதென்றது.
 
7. “அதுவு மாகுவ துண்டோ கதுமென
வஞ்சி நுண்ணிடை மடந்தைநின்
நெஞ்சங் காணிய பொய்ம்மொழிந் தனனே” (100)
 
என்பது   ஆற்றாளாய்      நின்ற       தலைமகளைத்    தோழி  பொய்ம்மொழிந்தனனென ஆற்றுவித்தது.

1.“தலைமகளை ஒருநாட் கோலஞ்செய்து அடியிற் கொண்டு முடிகாறும்
நோக்கி, ‘இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ’ என்று ஆராய்ந்த
செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது” (திணைமாலை நூற்றைம்பது.
62, கருத்து); குறுந் 379.

2.ஐங்குறு, 245, 247, 248, 249, 250

3.‘அறியா மையின் வெறியென மயங்கி, அன்னையு மருந்துய ருழந்தன ளதனால், எய்யாது விடுதலோ கொடிதே’ (ஐங்குறு. 242.)

4.குறள், 1137.