தமிழ்நெறி விளக்கம் 36
பூஞ்சிலம்பன், ஒண்டா ரகலமு முண்ணுங் கொலோநின் னுறுபலியே’, (பாண்டிக்கோவை.)
 12. 1முளையெயிறு நிரம்பா விளமைப் பருவத்
தொளிதிக ழொருவ னீட்டிய
தளையவிழ் கண்ணி தாங்கின ளுவந்தே” (105)

(களவியற் 49, மேற்)

என்பது செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது.
 13.2கயஞ்சான் மறுசுழி யழுந்தின மாக
முயங்கின னெடுத்த வண்ணலை
வயங்கிணர்க் கோதை மறவலள் பெரிதே” (106)
இதுவும் அது.

    1.‘எம்  கூழைக்கற்றைக்  குழவிப்  பிராயத்து மாழைகலந்த ஏழை
நீர்மையாரொடு    நாட்கோலஞ்    செய்து  விளையாடி  வம்மினென்று
போக்கினாய்; போக்கினவழி,  யாம்போய்   ஒரு   வெண்மணல்  பரந்த
தண்மலர்ப் பொழிலிடை  விளையாடி  நின்றேமாக,  ஒருதோன்றல்  ஒரு
சுனைக்குவளைப்பூக் கொண்டு அவ்வழியே போந்தான்; போதர நின்மகள்
அவனை நோக்கி அப்பூவினை என்பாவைக்கு அணியத் தம்மினென்றாள்;
அவனும் பிறிதியாதும் சிந்தியாது கொடுத்து நீங்கினான்;  இஃது அறிவது
அறியாக்காலத்து நிகழ்ந்ததென்னும்’  (
இறை.14, உரை);  “கந்தார் களிறு
கடாய்ச்செந் நிலத்தைக் கறுத்தெதிர்ந்து, வந்தா ரவியவை வேல்கொண்ட
கோன்கன்னி    வார்துறைவாய்ப்,    பந்தார்   விரலிதன்   பாவைக்கு
வேண்டப்பைம் போதொருவர், தந்தார் தரவவை கொண்டணிந்  தாளித்
தடங்கண்ணியே”, “திண்போ ரரசரைச் சேவூ ரழிவித்த  தென்னனன்னீர்,
மண்போ   யழிக்குஞ்செங்   கோன்மன்னன்  வையைநன்னாடனையாள்,
கண்போற் குவளையம் போதங்கொர் காளையைக்  கண்டிரப்பத்தண்போ
தவன்கொடுத் தானணிந்   தாளித்தடங்கண்ணியே”   (
பாண்டிக்கோவை
“சோலைத் திருமுரு  கன்னா  னொருவன்  றொடிமலர்க்கை,  நீலத்தின்
மேல்வழி  நெய்தல்வைத்  தாளந்  நினைவறிந்து,  கோலத்  திருவனை
யீர்வம்மி னீரது கொண்மினென்ன,  மாலைக்  கருங்குழல்,   வல்லிதன்
பாவைக்கு வாங்கினளே” (
அம்பிகாபதிகோவை.355.)

    2.ஓங்கிய வெண்குடைப்  பைங்கழற்  செங்கோ  லுசிதன்வையை,
வீங்கிய தண்புன லாடி விளையாட் டயர்பொழுதிற், றேங்கிய தெண்டிரை
வாங்க  வொழுகிநின்  சேயிழையாள்,  நீங்கிய  போதருள்  செய்தனன்
வந்தோர் நெடுந்தகையே”. “சின்னாண் மறந்திலம் யாமுந்தென் சேவூர்ச்
செருவழித்த, மன்னாள்செலச்செற்ற  வானவன்  மாறன்வை  யைத்துறை
வாய்ப்,   பொன்னார்   புனலெம்மை     வாங்கும்    பொழுதங்கொர்
பூங்கணைவேள்,   அன்னா    னொருவ   னணைந்தெமக்   குச்செய்த
வாரருளே” (
பாண்டிக்கோவை.)