1.“திருந்தா மொழியுந் திரளா முலையுந் தரனமென்னும் முருந்தாகுமென்னகை மூரலுந் துய்ய முருகவிழ்பூங், கருந்தாழ் குழலுமென் கைவந்ததில்லை கனங்குழையாய்’ அருந்தா வமுதமன் னாளறி வானின்னை யன்னளின்றே” (அம்பிகாபதிகோவை, 359.) 2.‘பரியஞ் சிறிதென்றானும் இளையளாலோ வென்றானும் நாளும் புள்ளும் திருத்தி வாரீரோ வென்றானும் அங்ஙனம் மறுத்தாரென்பதனைத் தலைமகள் கேட்ட ஞான்றும் ஆற்றாளாம்’ (இறை. 29, உரை.) 3.‘எம்பெருமான் ஒருவர்க்கு ஒருகுறை முடிப்பினல்லது ஒருவரை ஒரு குறைவேண்டுந்தன்மையனல்லன்; அல்லாதான் இக்குறைவேண்டியது, என்கட்கிடந்த அருளாகாதே? இவற்கு இவ்விளிவரவு ஆக்கினேன் பாவியேனெனவும் ............ தலைமகள் வேறுபடும்’ (இறை. 29, உரை,) 4.ஒப்பு: “சான்றோர் வருந்திய” ( தொல்.களவு. 23, பொருள், 20 ந; இறை. 28; களவியற், 49, மேற்); ”சான்றோர் வரவும்” (பாண்டிக்கோவை) |