தமிழ்நெறி விளக்கம் 38
நேர்ந்தன மல்லதிவ் வுலகம்
மூன்றுடன் பெறினு முடிவதோ வன்றே”(112)
என்பது வரைவெதிர் கொண்டது.

2. உடன் செலவு

23.

5.

கையடை மகிழ்ச்சி கண்டோர் கூற்றே
நைவுடைச் செவிலி நற்றாய் மொழியே
செல்சுரத் திரங்கல் கண்டோர் தெளித்தல்
இல்வயிற் பெயர்த் லிளையோர் செலவே
அறிந்தனன் மறைத லயலோர் மொழிதல்
பெயர்ந்தனன் வருதல் பெருங்கிளை மகிழ்வே
தாயர் கூற்றே தலைமகன் மொழியோ
டாயின பிறவு முடன்செல வாகும்.
என்பது உடன் செலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) கையடை முதலாகத் தலைமகன் கூற்று ஈறாகச் சொல்லப்பட்டன வரைவு மறுத்துழியாகிய உடன்செலவாம்.
எ - று.
1. “இவளே நின்னல திலளே யாயும்
குவளை யுண்க ணிவளல திலளே
யானு மாயிடை யேனே
மாமலை நாட மறவா தீமே”(113)

(தொல். அகத். 39, ந. மேற்; இறை23, மேற்; நம்பி, 182 மேற்.)

என்பது கையடை.
2. “மெல்ல மெல்ல*நின் னல்லடி யாற்றி
வருந்தா தேகுமதி மடவோய்
இருந்தண் பொழிலயாஞ் செல்லு மாறே” (114)

(களவியற்,51 மேற்.)

என்பது தலைமகன் மகிழ்ச்சிக் கிளவி.
3. .“உவந்தனை காண்டியோ நெஞ்சே மேனாள்
இவர்ந்தனை சென்று மெய்தாக்
கருங்குழன் மாதர் மயிலியற் கவினே”
(115)
இதுவுமது.
4.“1புதுப்பூங்கோதை புனைந்தெழி லாகமும்


1. ஒப்பு:‘கானப்பாதா” (அகநா.261); “காண்பா னவாவினாற்”
தொல். அகத். 40, ந. மேற்; செய் 155, பேர். மேற்.)*(பி - ம்.)
‘நின்னடை’