தமிழ்நெறி விளக்கம் 39

5

கதுப்பு நீவிநின் சிறுபுறங் காண்கென
முன்செல விடுப்ப நாணிப் பின்பின்
தாழ்ந்தன ளொதுங்க யானுந் தாழ்தலின்
வைகின மாதோ நெஞ்சே
.பைவிரி யல்குலொடு பழுவத் தானே” (116)
இதுவுமது.
5.“வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொ லளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
5.வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயி லழுவ முன்னி யோரா” (குறுந். 7)
என்பது சுரத்தெதிர்ப்பட்டார் சொல்லியது.
6. 1செங்கதிர்ச் செல்வனு மத்தஞ் சேர்ந்தனன்
கொங்கிவர் குழலோ டிவ்வழித்
தங்கினை சென்மோ நகைவெய் யோனே” (117)

(களவியற் மேற்.)

இதுவுமது.
7.

5.

2நெடுந்தேர்க் காளையொ டோராங் கேகிக்
கடுஞ்சுரந் தீதின் றிறந்தன ளவளெனக்
கூறுமி னந்தணிர் தொழுதன னும்மே
தேய்வுறு மதியொடு கலங்கும்
யாயு மாயமு மிருந்துயர் கெடவே” (118)
என்பது எதிர்கண்டார்க்குத் தலைமகள் சொல்லியது.
8. “வண்டார் கோதை வரிவளைத் தோளியைப்
பண்டா டிடங்களுட் காணா தின்னும்
நில்லா வுடம்பொடு கெழீஇ
நின்றனை கொல்லோ வாழிய நெஞ்சே” (119)
என்பது தலைமகளைக் காணாது செவிலி இரங்கியது.
9. “வலியை மன்ற நீயே பொலிவளை
காதற் றோழி கையகன் றொழியவும்
பேதுற லிலையா லுயிரொடும் புணர்ந்தே” (120)
என்பது தோழியை நோக்கிச் செவிலி சொல்லியது.

1.ஒப்பு. “எம்மூ ரல்லது”, நல்லோண் மெல்லடி” (தொல்.அகத்.
40,
; மேற்; களவியற்.51, மேற்.)

2.ஒப்பு.“சேட்புல முன்னிய”, “கடுங்கட் காளையொடு”
(
ஐங்குறு.384 - 5.)