தமிழ்நெறி விளக்கம் 40

 10. 1சூன்முதிர் கொண்மூ மின்னுபு பொழியக்
கானங் கடுமை நீங்குக
மானுண் கண்ணி போகிய சுரனே” (121)
என்பது தலைமகள் செலவுணர்ந்து நற்றாய் இரங்கியது.
 11.

 

 5.

“மறுவி றூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபி னின்கிளை வளர்ப்பப்
பச்சூன் பெய்த பசுந்தினைப் புன்கம்
பொலம்புனை கலத்திற் றருகுவன் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே”

(ஐங்குறு. 391)

இதுவுமது.
 12.

 

 5.

“நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
இலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டி னாட்டி னூரி னூரிற்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரு முளரோ நங் காத லோரே”

 (குறுந்.  130)

என்பது நற்றாய்க்குச் சொல்லிச் செவிலி பின் சென்றது.
 13.

 

2வெய்யோன் சாபத் தெய்கணை குளிப்ப
வீழ்ந்தது மன்றவிக் களிறே தாழ்ந்த
இடுமுத் தணிவடஞ் சுடரத்
தொடியோ ளொதுங்கிய சூழன்மன் னிதுவே” (122)
என்பது சுரத்திடைச் சென்ற செவிலி இரங்கியது.
 14. “காய்ந்திலை மறவை மன்னோ வேந்திழை
அழல்கெழு வெஞ்சுரஞ் செலவும்
எழில்கெழு பாவை யேந்திய குரவே” (123)
இதுவுமது.
 15. 3ஒண்டிற லண்ணலோ டொளியிழை மடந்தையை
நுண்புரி மார்பி னந்தணிர்
கண்டனிர் பிறவோ கடுஞ்சுரஞ் செலவே” (124)
என்பது செவிலி இடைச்சுரத்து வருவாரை வினாயிற்று.


     1. ஒப்பு.“மள்ளர் கொட்டின்” (ஐங்குறு. :371); “ஞாயிறு காயாது”
(
குறுந். 387.)

     2.“செறிகழல்,” “கொடுவிற்படை” (இறை. 23. மேற்.)

     3.ஐங்குறு. 387 : 1 - 3.