தமிழ்நெறி விளக்கம் 41

 16. 1மடவரன் மாதர்க்கு வருந்தா தீமோ
கடல்வயிறு பயந்த நித்திலம்
உடையோர்க் காத லுலகியல் வழக்கே” (125)
என்பது செவிலியை இடைச்சுரத்துக் கண்டோர் தெருட்டியது.
 17.என்னு முள்ளினள் கொல்லோ தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொ
டழுங்கண் மூதூ ரழுங்கச்
செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே”

(ஐங்குறு. 372)

என்பது செவிலி மனைவயிற் பெயர்ந்தது.
 18. “நாண்கால் வாங்கிய சிலையர் சீற்றமொ
டீங்கிவ டன்னையர் வருகுவர்
யாங்கா குவரிவர் வளையுங் காலே”   (126)
என்பது தலைமகள் தமர் பின்செல்லக் கண்டார் சொல்லியது.
 19. 2அயிலே ரம்பினர் நின்னையர் கயில்வளை
பயில்பூஞ் சுனையி னீழல்
மயிலேர் சாயன் மறைகுவன் சிறிதே”  (127)
என்பது தலைமகள் தமராதல் அறிந்து தலைமகன் மறைந்தது.
 20.



5.

“வரிசிலை யிடவயி னேந்திக் கணைதெரிந்
தெரியுமிழ் கண்ணின ரிவரே ஞாங்கர்
ஆயிழை மடந்தை தமரென மறைந்த
சேயுயர் செல்வனுஞ் சினவு மாயிடை
அறனன் றிதுவென வுரைஇத்
திறனறி மாந்தரைத் தெருட்டுது நாமே” (128)
என்பது இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது.
 21. “இவளே, நலமேம் பட்ட வம்பின ளிவளே
குலமேம் பட்ட சான்றோர் மகனே
இருவர் தன்மையு நோக்கிப்
பருவர லெய்தாது கொடுத்தலோ பண்பே” (129)
இதுவுமது.
 22. “பெரும்பட ருழக்குங் கிளைமகிழ் தூங்கத்
திருந்தெழி லல்கு லன்பொடு
வியன்பெருந் தொல்பதிப் புகுகநாம் விரைந்தே” (130)
      என்பது பெயர்ந்தனர் வருதல்.

     1. ஒப்பு. “வெந்நீ ரருஞ்சுரம்”, “நெருங்கடல்” (இறை. 23, மேற்.); கலி, 9: 15 - 7 ; சீவக. 563; பெருங். 1. 47 : 253 - 5.

     2.நற்.362 ; ஐங்குறு,312