தமிழ்நெறி விளக்கம் 42

 23. “வளங்கெழு கானம் வருகுவ ரின்றென
விளம்புமின் விரைந்தனிர் செலினே
உளங்கெழு காத லுயிரன்னோர்க்கே” (131)
என்பது ஆயத்தார்க்குக் கூறுமினென்றது.
 24. “மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி
தான்வரு மென்ப தடமென் றோளி
அஞ்சின ளஞ்சின ளொதுங்கிப்
பஞ்சி மெல்லடி பரல்வடுக் கொளவே” (132)

(தொல். அகத். 42. மேற்.)

என்பது வரவுணர்ந்து கிளை மகிழ்ந்தது.
 25. 1முதுவாய் வேல மொழிந்திசி னெமக்கே
மதுவார் கூந்தன் மடந்தையைக்
கதிர்வே லண்ணல் கருதிய திறனே” (133)
என்பது வேலனைச் செவிலித்தாய் வினாயது.

 26.


5.

 

 

“துறந்ததற் கொண்டுந் துயரடச் சாஅய்
அறம்புலந்து பழிக்கு மருநவை யாட்டி
எவ்வ நெஞ்சிற் கேம மாக
வந்தன ளோநின் மகளே
வெந்திறல் வென்வேல் விடலைமுந் துறவே”

(ஐங்குறு. 393)

என்பது செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.
 27. “அறனன் றம்ம தானே: நிறையழிந்
தாழ்துய ரவல முழக்கும்
காதற் றாய்க்குக் காட்டினை வம்மே” (134)
என்பது தலைமகற்குத் தலைமகன் நற்றாய் சொல்லியது.
 28. “நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும்
எம்மனை வதுவை நன்மணங் கழிக
என்றுநாஞ் சொல்லி னெவனோ தோழி
மையற விளங்குங் கழலடிப்
5.பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே”

(ஐங்குறு. 396)

என்பது தலைமகணற்றாய் செவிலிக்குச் சொல்லியது.
 29. “புதுவது புனைந்த வதுவைக் கோலமொடு
முதுவாய்ப் பெண்டிர் பராயின ரேத்தக்
கடிமனை யெம்மொடு புகுந்தோய் மேனாள்
 
  
1.ஒப்பு. “அருஞ்சுர மிறந்த” (அகநா. 195)