| அறிதலு மறிகியோ மடந்தை கறிவளர் சாரற் குறிவயி னானே” (135) |
என்பது தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. |
3. சேயிடைப்பிரிவு |
24. 5. | பிரிவகை யுணர்த்தலும் பாங்கி கூற உரிதினி னழுங்கலு மழுங்காக் காலை அறிகுவ னென்றலு மறியக் கூறலும் நறுநுத லினைதலு நயவரக் கூறலும் தெரியிழை நேர்தலுஞ் செலவுடன் மயங்கலும் வந்தது பொழுதென வருந்தலுந் தோழி நொந்தன ளுரைப்பவு நோவாள் கூறலும் ஆற்று வித்தலு மாயிடை வருவோன் மேனவுஞ் சேயிடைப் பிரிவெனக் கொளலே. |
என்பது சேயிடைப் பிரிவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) பிரிவுணர்த்துதல் முதலாகப் பெயர்ந்தோன் கூற்று ஈறாகச் சொல்லப்பட்டன சேயிடைப் பிரிவா மென்றவாறு. |
1. | “அறனு மீகையு மன்புங் கிளையும் புகழும் போகமுந் தருதலிற் புறம்பெயர்ந்து தருவது துணிந்தனம் பெரிதே விரிபூங் கோதை விளங்கிழை பொருளே” (136)(களவியற் மேற்.) |
என்பது தலைமகன் தோழிக்குப் பிரிவு உணர்த்தியது. |
2. | “எவன்பல மொழிகோ யானே யன்ப அகன்றிவட் பிரிந்த வந்நிலை நிகழ்ந்தன் றம்ம நீங்குத லுயிரே” (137) |
என்பது தோழி தலைமகள் நிலைமை கூறிச் செலவழுங்குவித்தது. |
3. | “யானொன்று கூறுவ லைய வானம் நிலம்பக வறந்த புலம்புறு சேணிடைச் செய்வினை நயந்தனி ராயி னவ்வினைக் கம்மா வரிவையு மாற்றுமோ நடையே” (138) |
இதுவுமது. |
4. | “ஆறுசெல் வருத்தஞ் சீறடி சிவப்பவும் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவும் தான்வர றுணிந்த விவளினு மிவளொடு வேய்பயி லழுவ முவக்குமென்
|
|