| பேதை நெஞ்சம் பெருந்தகை யுடைத்தே” (139) (தொல் அகத். 41, மேற் ; நம்பி 182, மேற்.) |
என்பது தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழங்குவித்தது. |
5. | “மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப் பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே” (குறுந் 71) |
இதுவுமது. |
6. | “குறித்ததை யிதுவென நெறிப்படக் கூறி அவணிலை யறிந்தியான் மொழிந்தபின் வழாஅது பொன்புனை நெடுந்தேர் பூண்கநின் மாவே” (140)(களவியற் மேற்.) |
என்பது அழுங்காது செலவு குறித்த தலைமகனுக்குத் தோழி சொல்லியது. |
7. | “அறியேன் றோழியவர் நெஞ்சுகுறித் ததுவே மறிபுணர் மான்பிணை கலையொடு மருவப் பரிவுறு முகத்த ராகி ஒருமுறை யன்றி நோக்கினர் பெரிதே” (141) |
என்பது தோழி தலைமகட்குக் குறிப்பினாற் பிரிவுணர்த்தியது. |
8. | “வரம்பில் கேள்விப் பெரும்பெயர்ப் பனுவல் பதினெண் மொழியிற் பயன்கொள விரிக்கும் மதிபுரை கேள்வி மதியோர் நசைஇப் பிரிவர்நங் காதலர் பிறபுலம் படர்ந்தே” (142) |
என்பது 1கல்வி விளக்குவான் பிரிவரென வெளிப்பட உணர்த்தியது |
9. | “மாயிரு ஞாலத் துயிர்தலை யளிக்கும் காவல் வேண்டினர் காதலர் ஆயிழை மடந்தை யாற்றுதல் கடனே” (143) |
என்பது காத்தற்குப் பிரிவரென உணர்த்தியது.
1.ஓதற்குப் பிரியு மென்பது கற்பான் பிரியுமென்பதன்று; பண்டே குரவர்களாற் கற்பிக்கப்பட்டுக் கற்றான் அறம்பொருளின்பம் வீடுபேறுகள் முதலிய நூல்களெல்லாம்; இனிப் பரதேசங்களிலும் அவை வல்லார் உளரெனிற் காண்ப லென்றும். வல்லார்கள் உள்வழிச் சென்று தன்ஞானம் மேற்படுத்து அவர்கள் ஞானங்கீழ்ப்படுத்தற்கும் பிரியுமெனக் கொள்க. (இறை. 35 உரை.) |