உணவு 10. | தினையே1தருப்பண முதிரை செந்நெல் விலைகோ ளினையன மேவிய வுணவே. |
(எ-து.) உணவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தினையும், தருப்பணமும், வரகு முதலியனவும், வயல் விளையுஞ் செந்நெல்லும், உப்பு விலையும் உள்ளிட்டனவெல்லாம் உணவா மென்றவாறு. இனையன என்றதனால் வெதிர்நெல்லும், கிழங்கும், 2தேனெய்யும், அருவி நீரும், சுனை நீரும்; ஆறலைத்தனவும், வறுஞ்சுனை நீரு. 3உவர்; நீரும்; கான்யாற்று நீரும்; வெண்ணெல்லும், கிணற்று நீரும், பொய்கை நீரும்; மணற் கூவல் நீரும் உள்ளிட்டனவெல்லாம் கொள்க.(10) இசை 11. | 4முருகியங் குறிஞ்சி துடியே பஞ்சுரம் பெருகிய வேறங் கோட்பறை தாரம் பல்லிய மருத 5மழப்பறை செவ்வழி சொல்லிய பிறவுஞ் சொற்றவற் றிசையே. |
(எ-து.) இசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வெறிப்பறையும். குறிஞ்சிப் பண்ணும்; துடியும் பஞ்சுரப் பண்ணும்; ஏறங்கோட் பறையும், தாரப் பண்ணும்; நெல்லரி கிணையு முதற் பல்லியமும், மருதப் பண்ணும்; நெய்தற் பறையும், செவ்வழிப் பண்ணும் உள்ளிட்டன ஐந்திணைக்கும் இசையா மென்றவாறு. பிறவுமென்றதனால் தொண்டகப் பறையும், பூசற் பறையும், வேய்ங்குழலும், யாழும், 6நாவாய்ப் பறையும் உள்ளிட்டனவெல்லாம் கொள்க. (11) 1. தருப்பணம் - அவல்; “ஆத்திரைத் தருப்பணம்” ( பெருங். 2. 9: 251) என்பதனால் யாத்திரை செல்வாரை வழிபறித்துப் பெறுவதென்று கொள்க. 2. தேனெய் - தேனாகிய நெய்; இரு பெயரொட்டு. 3. “கல்லறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில்” (அகநா 76: 3.) 4. முருகியம்: “முருகிய நிறுத்து முரணின ருட்க” (முருகு. 243) 5. அழப் பறை-பிணத்திற்குக் கொட்டும் சாப்பறை; அழன்-பிணம், 6. இறை. 1, உரை; நம்பி. 24;சீவக. 501. |