தமிழ்நெறி விளக்கம் 46
.10. “மீளா வென்றி யிருபெரு வேந்தரை
வாளம ரழுவம் பெயர்க்கும்
ஆள்வினைக் ககல்வர்க்நம் மன்பி னோரே” (144)
என்பது பகை = தணிப்பான் பிரிவரென உணர்த்தியது.
 11.“வெல்பெருந்தானை வேந்தன் பகைமிசைச்
செல்குவர் மாதோ காதலர்
அல்லியங் கோதை யழுங்கலோ வொழியே” (145)
என்பது வேந்தற் குற்றுழிப் பிரிவரென வுணர்த்தியது.
12.

“நாளு நாளு மான்வினை யழுங்க
இல்லிருந்து மகிழ்வோர்க்கில்லையார் புகழென
ஒண்பொருட் ககல்வர் நங் காதலர்
கண்பனி துயரொழி தோழி நீயே”

(சிற்றட்டகம்; நம்பி. 251, மேற்.)

 

என்பது பொருள்வயிற் பிரிவரென உணரத்தியது.
13.1சேறல ரென்ப துளதெனி னுரைமதி
மாறினர் வல்வர வுரைப்பின்
ஊறின் றிவ்வழி வாழ்வோர்க் குரையே” (146)
என்பது பிரிவரென்பது கேட்ட தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. 1
14.

 

5.

‘நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய
யாரே பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மரா = அத்து
வேனி லஞ்சினை கமழும்
தேமூ சொண்ணுத னின்னொடுஞ் செலவே”     (
குறுந். 22)
என்பது ஆற்றாளாயதலைமகட்குத் தோழி பிரிவு நயப்பச் சொல்லியது
15.“நல்லிசை நிறுத்தல் வேண்டித் துணைபிரிந்து
செல்வது காதலர் கடனே சென்றென
ஒல்கிய வுள்ளமொடு புலவா
தில்லிருந் தாற்றுதல் கற்பின தியல்பே” (147)
1இதுவுமது.
16.“எழுதரு மதியங் கடற்கண் டாஅங்
கொழுகுவெள் ளருவி யோங்குமலைநாடன்
ஞாயி றனையனென் றோழி
நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே” (குறுந். 315)
என்பது தலைமகள் பிரிவுடன்பட்டது.
17. “அருஞ்சுரக் கவலையும் பிரிந்தென வரூஉம்
பெருதண் வாடையு நினைஇ
வருந்துக மெம்மை மறவா தீமே” (148)
 
என்பது பிரிவுடன்பட்ட தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.

1.ஒப்பு ; குறள், 1151,