இதுவுமது. |
18. | “காலிய னெடுந்தேர்க் கடும்பரி கடைஇப் பாலைக் கானம் போகி வினைமுடித் தின்னே வருக நாமே பொன்னேர் மேனி புலம்புதவப் பெரிதே” (149) |
என்பது பிரிந்து செல்லுந் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. |
19. | “1ஆண்டவ ணொழிந்தன்று மிலையே யீண்டிவண் எழுவினி வாழியென் னெஞ்சே பணிமொழி மையே ருண்கண் கலுழச் செய்வது துணிந்த பொருள்வயி னானே” (150) |
என்பது தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நினைந்த நெஞ்சினைத் தெளித்துச் சென்றது. |
20. | “2செல்லா ரவரென யானிகழ்ந் தனனே ஒல்லா ளிவளென வொழிந்தனர் நல்லெழி லுண்க ணலியுமென் னெஞ்சே” (151) |
என்பது தலைமகன் அறியாமற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாது சொல்லியது. |