என்பது தலைமகள் அதனுக்கு ஆற்றாளாய் மொழிந்தது. |
27. 5. | “நிறைநீர் மாமழை பொறைமெலிந் துகுத்தென வம்பத் தண்பெய லுணராள் கண்டே காரென வருந்து மிவளினு மிவள்வாய்த் திருநகை யெயிற்றி னிணர்முகை யரும்பிய பெருந்தண் முல்லையு முடையவா னகையே” (158) |
என்பது பருவம் அன்றென ஆற்றுவித்தது. |
28. | “காரே செய்த கானங் கனைபெயற் கோப மூர்ந்த கொங்குசேர் நெடுநெறி உள்ளினு முள்ள முவப்பப் புள்ளெழ வந்தன்று நெடுந்தகை தேரே” (159) |
என்பது தேர்வரவு கூறி ஆற்றுவித்தது. |
29. | “இல்லமொடு மிடைந்த கொல்லை முல்லைப் பல்லான் கோவலர் பையு ளாம்பல் மயங்கிருண் மாலை கேட்டொறும் கலங்குங்கொ லளியணங் காத லோளே” (160) |
என்பது வினைமுடித்து மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியது.
1.இவ்வடி பலநூலுரைகளில் ஒருமை--பன்மை மயக்கத்துக்கு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. |