தமிழ்நெறி விளக்கம் 49

30. “வாரா ராயினர் காத லோரென
நீர்வார் கண்ணினள் புலம்பக்
காரார் மாமுகில் கடுஞ் செல வொழியே” (161)
என்பது முகிலுக்குச் சொல்லியது.
 31. “ஊர்க பாக தேரே கார்கண்டு
பாசறை நீடினர் காத லோரென
நப்புலந் துறைவோள் காண
இப்பொழு தவள் = வயிற் புகுக நாமே” (162)
என்பது தேர்ப் பாகற்குச் சொல்லியது.
 32. 1காதலர் வரவு காட்டினை யாதலிற்
சூழ்கதிர்ச் சுரிமுகப் பணிலம்
வாழிய மலர்தலை யுலகுழை நெடிதே”  (163)
 என்பது தோழி சங்கினை வாழ்த்தியது.
 33. “புரிகுழன் மடந்தை பொலிவோடு மன்பர்
வரவினுக் கெதிர்ந்த நம் மக ......... வின்விழ
து ............. ய பயனே” (164)
என்பது தலைமகட்குத் தோழி சொல்லியது.
34. 2பிரித லாற்றுமோ நின்னே யரிதின்
உடம்பாண் டொழிந்தமை யல்லது
மடங்கெழு நோக்க மரீஇய நெஞ்சே” (165)
என்பது தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. (24)

4. ஆயிடைப் பிரிவு

 25.

 

5.

 வாயின் மறுத்தலும் வாயில் கூறுலும்
தோழி மாற்றலும் புலவி தோற்றலும்
கிழவன் புலத்தலுங் கிழவி புலத்தலும்
விழைகுநன் விழையா னிவவென விளம்பலும்
தாய்கண் டுரைத்தலுந் தாங்கிய காதலின்
ஆயின பிறவு மாயிடைப் பிரிவே.
  என்பது ஆயிடைப் பிரிவு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

      (இ - ள்)வாயில்மறுத்தல்   முதலாகச்   செவிலி   கூற்றீறாகச் சொல்லப்பட்ட இவையும் பிறவும் பரத்தையிற்   பிரிவாம்   என்றவாறு.


     1.“புரிவளை”, “தேனிறவார்” (இறை.56, மேற்.)

     2.“மாண்வினைக், குடம்பாண் டொழிந்தமை யல்லதை, மடங்கெழு நெஞ்ச நின்னுழை யதுவே” (அகநா. 29 : 21 3.)