தமிழ்நெறி விளக்கம் 5
4.

1காண்குவி ராயிற் கழறலிர் மன்னோ
பூண்புனை வளரிள வனமுலை
மாண்குழை மாதர் மடங்கெழு நோக்கே”

    என்பது கழற்றெதிர் மறுத்தது. (9)
 
5.“புலந்துறை போகிய நெஞ்சுநிறை யழிந்து
கலங்குவ தாயின் மாதோ
சிலம்பனை யாரோ தெளிக்குநர் பிறரே.”    (10)

    என்பது பாங்கன் பிழைத்தனனென்று ஆற்றானாயிற்று.
 
6.“வாழ்வதி யாவது கொல்லோ வான்புகழ்ச்
சூழ்கழ லண்ண னெஞ்சம்
ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்கே”  (11) (களவியற்.. 26, மேற்.)

    என்பது பாங்கன் இடம் வினாயிற்று.
 
7.“கண்ணே காவியங் கயமலர் நுதலே
தண்ணிள மதியெனத் தகுமே பதியும்
பெருமலைச் சாரற் சீறூர்
அருநிறை வாங்கிய வாயிழை தனக்கே”      (12)

    என்பது தலைமகள் குறியுரைத்தது.
 
8.“வேங்கை யொள்வீ காந்தளொடு கமழும்
பூந்தண் சாரலு மிதுவே யேந்திலை
அயில்வே லண்ணல் கூறிய
மயிலேர் சாயல் வண்ணமு மிதுவே”(13) (
களவியற்.27, மேற்.)

    என்பது பாங்கன் எதிர்ப்பட்டது.
 
9.“நோதக வுடைத்தே நெஞ்ச மதிமிசை
மாதர்க் குவளை மலர்மலர்ந் தன்ன
கருந்தடங் கண்கண் டாற்றிய
பெருந்தகை யண்ணலைக் கழறினன் பெரிதே” (
களவியற். 27, மேற்)

    என்பது தலைமகன்ஆற்றல் கூறியது.


     1. காணிற் கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே” (திருச்சிற்
23);   “அம்மவாழி”    (
அகநா. 130)    என்பதையும்,    “விண்டார்பட”,
‘விண்டலங்கெஃகொடு”,  “மண்கொண்டு”   (
பாண்டிக் கோவை)  என்னும்
செய்யுட்களையும் பார்க்க.