தமிழ்நெறி விளக்கம் 52

மரம் முதலியன

12.வேங்கை காந்தள் சீய மயிலே
பாங்கர் மராமரஞ் செந்நாய் பருந்தே
குருந்தே முல்லை யிரலை புறவே
காஞ்சி கழுநீர் மேதி யன்னம்
5 கைதை முண்டகங் கராமே கம்புளென்
றெய்திய பிறவு மியம்பிய விலங்கே.

     (எ-து.) விலங்காமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.) வேங்கை மரமும்,   பூங்குலைக்    காந்தளும்,   சீயமாவும்,
மயிற்புள்ளும்; ஓமை மரமும், மராம்பூவும், செந்நாய்மாவும், பருந்துப் புள்ளும்;
1குருந்த மரமும், கொடிப்பூ முல்லையும்,  இரலை   மாவும்,   புறவுப்புள்ளும்;
காஞ்சி மரமும், பூங்கழு நீரும், எருமை  மாவும்,  அன்னப்  புள்ளும்; தாழை
மரமும், பூங்கழி முள்ளியும், 2முதலை மாவும்,  3கம்புட்   புள்ளும்   பிறவும்,
ஐந்திணைக்குரிய விலங்கா மென்றவாறு.

     பிறவு மென்றதனால், அகிலும், சந்தனமும்,  வேங்கைப் பூவும்;  சுனைக்
குவளைப்பூவும்,  புலியும்,  யானையும்,  கிளியும்,   வேங்கையும், குராம்பூவும்,
பாதிரம்பூவும், முருக்கும்; கொன்றையும், தோன்றிப்  பூவும்,  முயலும்,  கானங்
கோழியும்;  மருதும்,   வஞ்சியும்,   தாமரைப்பூவும்,   நீர்நாயும்,   தாராவும்;
புன்னையும், ஞாழலும், நெய்தற் பூவும், அன்னமும், 4மகன்றிலும், உள்ளிட்டன
வெல்லாம் கொள்க. (12)

உரிப்பொருள்

13.புணர்தலும் பிரிதலு மிருத்தலு மூடலும்
மனைவயி னிரங்கலு மவற்றி னிமித்தமும்
களவொடு கற்பெனக் கவைநர் கூறிய
அளவி லுரிப்பொரு ளாகு மென்மனார்.

    1. “பெருந்தண் முல்லைப்   பிள்ளை   யோடிக்,   குருந்தந்   தழுவுங்
கூடலூரே”(‘திவ்.
பெரியதிரு. 5. 2:7.)

    2. ‘மா சுறவும் முதலையும்’ (இறை, சூ. 1, உரை); “கெண்டை  யஞ்சினை
மேய்ந்து கிளர்ந்துபோய், முண்டகத்துறை சேர்ந்த முதலைமா’
சூளா.
நாட்டுச். 22.)

    3. கம்புள்-சம்பங்கோழி.

    4. “நீருறை மகன்றிற் புணர்ச்சிபோல”   (குறுந். 57:2);   “அலர்ஞெமன்’
மகன்றில்” (பரி. 8: 44.)