(எ-து.) உரிப்பொருளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புணர்தலும் புணர்தல் நிமித்தமும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும், ஊடலும் ஊடல் நிமித்தமும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும், களவும் கற்புமென அடக்கிக் கூறப்பட்ட அளவில் உரிப்பொருளாமென்றவாறு. குறிஞ்சிமுதல் ஐவகை நிலத்திற்கும் சிறப்பு நோக்கியவழிப் புணர்தன் முதல் நிரை நிரையாற் கொள்ளப்படும். அவ்வழிச் சிறுபான்மை எனைத்திற்கு முரிய வழக்கொடு பட்டவாறு கொள்க. (13)1. களவு 14. | முந்திய நூலோர் மொழிந்தவெண் மணத்தினும் கந்திருவ முறைமை களவெனப் படுமே. |
(எ-து.) கைகோள் இரண்டினுள்ளும் களவொழுக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொன்னூலாசிரியர்களாற் சொல்லப்பட்ட1அற நிலை, ஒப்பு, பொருள் கோள், தெய்வம், அரும்பொருள், வலிநிலை, பேய்நிலை, கந்திருவம் எனப்பட்ட மணம் எட்டினுள்ளும் கந்திருவ வழக்கம் போல்வது களவொழுக்கமா மென்றவாறு. 2அறநிலையாவது நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங் காத்தாற்குப் பன்னீராட்டைப் பிராயத்தாளை அணிகலம் அணிந்து கொடுப்பது. இஃது ஒப்பில் கூட்டமாதலிற் பொருந்தாக் காமத்தின்பாற் படும். 1. “அறநிலை யொப்பே பொருள்கோடெய்வம், யாழோர் கூட்ட மரும் பொருள் வினையே, இராக்கதம் பேய்நிலை யென்றிக் கூறிய, மறையோர் மன்ற லெட்டிவை யவற்றுள், துறையமை நல்லியாழ்த் துணை. மையோ ரியல்பிதன், பொருண்மை யென்மனார் புலமை யோரே” ( தொல் களவு. 1. இளம். இறை. சூ. 1, மேற்..) 2. இது பிரமமெனப்படும்; “கயலே ரமருண்கண் கன்னிபூப்பெய்தி: அயல்பேரணிகலன்கள் சேர்த்தி-இயலின், நிரலொத்த வந்தணற்கு நீரிற் கொடுத்தல், பிரமமண மென்னும் பெயர்த்து” ( தொல். களவு.. 1, ந.); “ஒப்பாருக் கொப்பாரொருபூப் பிரிந்தபின், இப்பான் மதிதோன்றாவெல்லைக் கண்-அப்பால்,தருமமே போல்கென்று தக்கார்க்குச் சேர்த்தல் பிரமமாம் பாலும் பெயர்”(யா.வி. 96, மேற்.) |