1ஒப்பாவது மைத்துனக் கோத்திரத்தாற்கு மாற்றாது கொடுப்பது. இது கற்பின்பாற் படும், 2பொருள் கோளாவது ஆனும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற்குளம் பினவாகச் செய்து அவற்றோடு நீரிற் கொடுப்பது இவ்வாறு ஈதற்கண் ஒத்தபிராய முதலாயினவற்று உளவெனின் கற்பின்பாற் படும்; அன்றெனிற் பொருந்தாக் காமத்தின்பாற்படும். 3தெய்வமாவது வேள்வியாசிரியற்கு வேள்வித்தீ முன்னர்க் கொடுப்பது. இதுவும் பொருள் கோளோ டொக்கும். 4அரும்பொருள் நிலையாவது கொல்லேறு தழுவுதல் வில்லேற்று முதலியன செய்தார்க்குக் கொடுப்பது. இது வன்மணமாதலிற் பொருந்தாக் காமத்தின்பாற் படும். 1. இது பிராசாபத்தியமெனப்படும்; “அரிமத ருண்க ணாயிழை யெய்துதற் குரியவன் கொடுத்த வொண்பொருளிரட்டி, திருவின்றந்தை திண்ணிதிற் சேர்த்தி, அரியதன் கிளையோடமைவரக் கொடுத்தல், பிரிதலில்லாப் பிராசாபத்தியம்” (தொல். களவு, 1, ந.); “கொடுத்த பொருள் வாங்கிக் கொண்டபேர் ........... மடுப்பர் மடுத்தற் கமைந்தால்- அடுப்போன், இரண்டா மடங்குபெய் தீவ ததுவே, இரண்டா மணத்தினியல்பு” (யா. வி. 96. மேற்.) 2. இஃது ஆரிடமெனப்படும்; “தனக்கொத்த வொண்பொருடன் மகளைச் சேர்த்தி, மனக்கொத்த மாண்புடையாற் பேணி-இனக்கொத்த, ஈரிடத் தாவை நிறீஇயிடையீவதே, ஆரிடத்தார் கண்டமண மாம்” ( தொல் களவு. 1,ந. மேற்.); “இற்குலத்தோ டொப்பானுக் கொப்பானமிலேறாப் பொற்குளம்பிற் பொற்கோட்ட வாப்புனைந்து - முற்படுத்து, வாரிடம்பேராமுலையை வாழ்க்கைக்கண் வைப்பதுரை, ஆரிடம் பேரா மதற்கு” (யா. வி. 96, மேற்.) 3. “நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த, வேள்வி விளங்கழன் முன்னிறீஇக்-கேள்வியாற், கைவைத்தாம் பூணாளைக் காமுற்றாற் கீவதே, தெய்வ மணத்தார் திறம்” (தொல். களவு. 1. ந.); “மெய்ப்பாலைப் பெண்டன்மை யெய்தியபின்மெல்லியலை, ஒப்ப வுணர்ந்த பொழுதுண்டல்- ஒப்பாற்கு, நெய்தயங்குதீமுன்னர் நேரிழையை யீவதே, தெய்வப்பே ராகுந் தெளிந்து” (யா. வி. 96,மேற்.) 4. இஃது ஆசுரமெனப்படும் “முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத்,தகைநலங் கருதுந் தருக்கின ருளரெனின், இவையிவை செய்தாற் கெளியண்மற்றிவளெனத், தொகைநிலை யுரைத்த பின்றைப் பகைவலித், தன்னவையாற்றிய வளவையிற்றயங்கல், தொன்னிலையசுரந் துணிந்த வாறே” (தொல். களவு. 1,ந.); “வில்லேற்றல் வேள்வியைக் காத்தன் மிகுவலிக், கொல்லேற்றியல்குழையைக் கோடலென் றெல்லாம், அரியனசெய் தெய்தினா னாயினசுரம், மரியவா மந்த மணம்” பர. வி. 96, மேற்.) |