தமிழ்நெறி விளக்கம் 6
10. “ஆய்தளிர் பொதுளிய வீததை தண்சினைக்
1காய்கதிர் நுழையாக் கடிபொழில்
யாவயி னோரும் விழைவுறுந் தகைத்தே” (களவியற்.. 28. மேற்.)

    என்பது பாங்கன் பெயர்ந்து வந்து தலைமகற் குரைத்தது.
 
11.

2தனிமை நெஞ்சத்து முனிவுகண் ணகற்றலின்
வினைமாண் பாவை யன்ன
புனையிழை மாதரும் போன்றதிப் பொழிலே”(16)
                                  (களவியற்.. 28. மேற்.)

     என்பது தலைமகன் அவ்விடத்துச் சென்றது.
 
12. 3தெய்வ மாக வையுறு நெஞ்சம்
பொய்யா தாயினின் செவ்வாய் திறந்து
கிளிபுரை கிளவியாம் பெறுக
ஒளியிழை மடந்தை யுயிர்பெயர்ப் பரிதே”(17)
                                 (களவியற்.. 28, மேற்.)

     என்பது தலைமகள் அணைதலுறவினாற்றான் கூறியது.


    1. “கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை” (புறநா. 21: 5); “வெயினுழை
பயியாக் குயினுழை பொதும்பர்” (பெரும்பாண். 374, அடிக்)

    2. “குழைமுகத்தாற் கொங்கை மலையு மருங்கால், விழியரிய நாட்டத்தால்
வேனற் - பொழிலெல்லாம், புல்லார்ப்  புறங்கண்ட   கண்டன்    புகாரனைய
நல்லாளே யாகு   நமக்கு”,   “முருக்கின்   புதுமலரான்  முல்லை  நகையால்,
நெருக்கியெழுஞ்     செவ்விள     நீராற்  -    குருக்கொடியால்,    நான்ற
குழைமுகத்தானானயந்த நன்னுதலைப் போன்ற துயர்பூம் பொழில்”  (களவியற்..
மேற்.) “தேர்மன்னு தானை பரப்பித்தென் சேவூர்ச் செருமலைந்த போர்மன்னர்
தம்மைப் புறங்கண்டு நாணிய பூங்கழற்கால், ஆர்மன்னு வேலரி  கேசரியந்தண்
புகாரனைய, ஏர்மன்னு கோதையைப் போலினி  தாயிற்றிவ்  வீரம்  பொழிலே”
(பாண்டிக்); “கரிதாகி  மென்குழல்   போனிழல்   போற்கலந்தால்   விடுத்தற்,
கரிதாயுறவி லறவினி தாயர வல்குனிற், பெரிதாய்  விரும்பின  வெல்லா  நுகர
பெறுவதற்கே, உரிதா  யளியுடைத்   தாயவர்   போலு   முயர்   பொழிலே”
(அம்பிகாபதி. 23); “காம்பிணை யாற்களி   மாமயி   லாற்கதிர்   மாமணியால்,
வாம்பிணை யால்வல்லி யொல்குத   லான்மன்னு   மம்பலவன்,   பாம்பிணை
யாக்குழை   கொண்டோன்    கயிலைப்   பயில்புனமும், தேம்பிணை   வார்
குழலாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே” (திருச்சிற். 38.)
 

    3. “செய்ய  மலரிற்   றிருமகளே   யென்றுன்னை,  ஐய   முறுகின்றே
னல்லையேல் - உய்ய, உரைதந் தருளா யுயிர்வருமோ  போனால்,  விரைதந்த
மேனியாய் மீட்டு ” (கிளவித் தெளிவு); “மேவியொன் னாரை  வெண்  மாத்து
வென் றான்கன்னி        வீழ்பொழில்வாய்த்,     தேவியென்   றாநின்னை
யானினைக்கின்றது சேயரிபாய், காவிவென்  றாயகண் ணாயல்லை யேலொன்று
கட்டுரை.